சென்ஸார் போர்டு வாயிலாக லீக்கான ‘பேட்ட’ படத்தின் கதை, திரைக்கதை இதுதான்....

Published : Dec 30, 2018, 01:08 PM ISTUpdated : Dec 30, 2018, 01:11 PM IST
சென்ஸார் போர்டு வாயிலாக லீக்கான ‘பேட்ட’ படத்தின் கதை, திரைக்கதை இதுதான்....

சுருக்கம்

அடுத்து வட இந்திய கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் வார்டன் அவதாரம் எடுக்கும் ரஜினி சசிக்குமார், த்ரிஷாவைகொன்றவர்களைத் தனித்தனியாய் பிரித்து மேய்ந்து பலிவாங்குகிறார்.

’அடடே இந்தக் கதையை எடுத்திருந்தா படம் இன்னும் பரபரப்பா இருந்திருக்குமே என்று கார்த்தி சுப்பாராஜும், ‘வீரம்’ சிவாவும் ஜெர்க் ஆகிற அளவுக்கு இரண்டு படங்களின் கதைகள் இதுதான் என்று இணையங்களில் பல கதைகள் படமெடுத்து ஆடிக்கொண்டிருக்கின்றன.

அப்படி இன்று அதிகாலையிலிருந்து நடமாடிக்கொண்டிக்கும் ஓரளவுக்கு நம்பகத் தன்மையுள்ள ‘பேட்ட’ படத்தின் கதை இதோ...

மதுரைவாசியான ரஜினிக்கு பெற்றோர்கள் இல்லை. அதனால் இஸ்லாமியக் குடும்பமான சசிக்குமார் இல்லத்தில் குடும்ப உறுப்பினர் போலவே உலா வருகிறார். சசிக்குமாருக்கும் ரஜினிக்கும் மாமன் மச்சான் என்கிற அளவுக்கு உறவு. சசிக்குமார் தனது கல்லூரித் தோழியான வேற்று மதத்தைச் சேர்ந்த த்ரிஷாவைக் காதலிக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் ரகசிய திருமணம் நடத்தும் வேலைகளில் ரஜினி இறங்கிக்கொண்டிருக்க, இதை அறவே வெறுக்கும் த்ரிஷாவின் உறவினர்கள் சசிக்குமாரையும் த்ரிஷாவையும் ஆணவக் கொலை செய்துவிடுகிறார்கள். அவர்களது அடுத்த டார்கெட் ரஜினியாக இருக்க அவர் மதுரையைக் காலிசெய்து தலைமறைவாகிவிடுகிறார்.

அடுத்து வட இந்திய கல்லூரி ஹாஸ்டல் ஒன்றில் வார்டன் அவதாரம் எடுக்கும் ரஜினி சசிக்குமார், த்ரிஷாவைகொன்றவர்களைத் தனித்தனியாய் பிரித்து மேய்ந்து பலிவாங்குகிறார்.

இது இரு தினங்களுக்கு முன்பு சென்ஸார் அலுவலகப் பார்ட்டிகள் வாயிலாக வெளியானதாகச் சொல்லப்படும் கதை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!
கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்