
2006 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அவுட் ஆப் சிலபஸ்' திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை பார்வதி.
பின் கன்னடம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் நடிக்க துவங்கினார். இவர் தமிழில் அறிமுகமான 'பூ' படத்தில் நடித்த மாறி கதாப்பாத்திரம் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தனுஷ் நடித்த 'மரியான்', 'பெங்களூரு நாட்கள்' போன்ற சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும், இவருக்கென தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது.
சிறந்த கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் இவர், சமூக அக்கறை கொண்ட விஷயங்களையும் எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படையாகப் பேசுபவர். இந்நிலையில் தற்போது நடிகை என்பதையும் தாண்டி இயக்குனராகவும் அவதாரம் எடுக்க உள்ளதாக கூறியுள்ளார் பார்வதி.
இது குறித்து அவர் கூறுகையில், படம் இயக்க வேண்டும் என்கிற ஆசை நீண்ட நாட்களாகவே தனக்கு இருந்ததாகவும், இது திறமையை நிரூபிப்பதற்காக மட்டுமல்ல நேர்மையாக சொல்லப்போனால் ஒரு கதையை நான் திரை வழியாக சொல்ல விரும்புகிறேன் என்பதுதான் உண்மை என கூறியுள்ளார். எனவே விரைவில் இவர் இயக்கியுள்ள படம் குறித்த தகவல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.