
Pandian Stores 2 Today Episode : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கடந்த சில நாட்களாக அரசி, முத்துவேல் மற்றும் சக்திவேல் தொடர்பான காட்சிகள் இடம் பெறவில்லை. அதற்கு மாறாக பாண்டியனின் குடும்பத்தினர் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் தான் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 518ஆவது எபிசோடில் பாண்டியன் செந்திலை திட்டும் காட்சிகளுடன் தொடங்குகிறது. அதில் பாண்டியன் தனது மகன் செந்திலை இந்த கடைக்கு நீ தான் ஓனர். கஷ்டப்படாமல் ஓனராக வந்தால் அப்படித்தான். அதனுடைய அருமை தெரியாது. உன்னுடைய ஃபரண்ட்ஸ் பாரு, எல்லோருமே கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு தான் சொந்த கடையின் அருமை தெரியும். அப்படி, இப்படி என்றூ பேசி தள்ளிவிட்டார்.
இதைத் தொடர்ந்து கதிர் மற்றும் ராஜீ தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது இருவரும், வெளியில் சென்றனர். அப்போது ராஜீ, கதிரிடம் எதற்கு மாமாவிடம் சண்டை போட்டுக்கொண்டே இருக்கிற என்றெல்லாம் கேள்வி எழுபினார். அதற்கு கதிர், எதற்கெடுத்தாலும் நானும் அப்பாவும், பூனையுமா சண்டை போட்டுக் கொண்டிருப்போம். கடைக்கு சென்று என்னால் வேலை பார்க்க முடியாது.
அப்படியே சென்றாலும் அவர் எல்லோர் முன்னிலையும் சொல்லி சொல்லிக் காட்டுவார். அப்புறம் 4 பாடத்தில் பெயிலானதையும்சொல்லி பேசுவார். அதனால்,அப்படியே விட்டுவிடலாம். நான் எப்படியும் எதாவது ஒரு வேலையில் இருப்பேன் என்று ராஜியிடம் பேசினார். கடைசியாக செந்தில் மற்றும் கதிர் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இதில் எப்போது அரசு வேலை கிடைக்கும் என்று செந்திலிடம் கேட்க, அதற்கு கிடைகும்போது பார்த்துக் கொல்லலாம் என்று செந்தில் பேச,கண்டிப்பாக வேலை கிடைக்குமா?
ஏனென்றால் அண்ணி தான் பணத்தை திரும்ப வாங்கி அத்தையிடம் கொடுத்து விட்டாங்க. அப்படியிருக்கும் போது எப்படி வேலை கிடைக்கும் என்றார். அதற்கு செந்தில் மீனா பணத்தை வாங்கவில்லை. அலுவலகத்தில் லோன் போட்டு தான் பணத்தை திரும்ப கொடுத்தார் என்ற் உண்மையை வெளிப்படுத்தினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.