அம்பேத்கர் பெயர் சூடிக்கொண்ட சமுத்திரக்கனிக்கு இயக்குநர் பா.ரஞ்சித் பாராட்டு...

By Muthurama LingamFirst Published Apr 15, 2019, 11:28 AM IST
Highlights

’சினிமாவில் பாலியல் ரீதியாகப் பெண்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் உண்மைதான். அதற்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பெண்களை வெறுத்து ஒதுக்குவது நியாயமாகாது’ என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

’சினிமாவில் பாலியல் ரீதியாகப் பெண்கள் துன்புறுத்தப்படுவது முற்றிலும் உண்மைதான். அதற்காக பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் பெண்களை வெறுத்து ஒதுக்குவது நியாயமாகாது’ என்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

‘பச்சை என்கிற காத்து’ பட இயக்குநர் இயக்கத்தில் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்துள்ள ‘பற’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை பிரசாத் லேப்பில் நடைபெற்றது. வர்ணாலயா சினி கிரியேசன்ஸ் சார்பாக ராமச்சந்திரன், பெவின்ஸ் பால்  ஆகியோர் தயாரித்துள்ள அப்பட நிகழ்ச்சியில் பா.ரஞ்சித் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார்.

”ஒரு படத்தின் தரத்தை பட்ஜெட் தீர்மானிப்பதில்லை. அப்படம் தாங்கி நிற்கும் கதை தான் தீர்மானிக்கும். அப்படி சமுத்துவத்தை தாங்கி நிற்கும் சமூகத்தில் ஓங்கி அறையும் வலிமையான கதைகளில் நடித்து வருவதை பெருமையாக கருதும் சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தான் பற. இந்தக் கூட்டத்தைப் பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கிறது. இயக்குநர் கீரா அண்ணனுக்கு இப்படியொரு வரவேற்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. கீரா அவரது கொள்கையை ஓங்கிப் பேசி வருகிறார். சாதிய ஒடுக்குமுறைகளைப் பற்றிய ஆழமான புரிதலை இந்தப்படம் பேசி இருக்கும் என்று நம்புகிறேன். 

புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை சமுத்திரக்கனி அண்ணனுக்கு வைத்திருக்கிறார்கள். இந்த மாதிரியான படங்கள் வெற்றிப் பெறவேண்டும். சமீபத்திய எல்லா கமர்சியல் சினிமாவிலும் சாதி பற்றிய டிஸ்கஷன் வைக்க வேண்டிய சூழல் உருவாகி இருப்பது மிகவும் வரவேற்கக் கூடியது. சினிமாவில் பாலியல் ரீதியாக பெண்கள் சுரண்டப்படுவது உண்மை தான். பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை வைப்பதாலே அவர்களை குற்றம் சாட்டக்கூடாது" என்றார்.

click me!