ஆரவ் காதல் விவகாரம்... அதிரடியாக முற்று புள்ளி வைத்தார் ஓவியா...

 
Published : Aug 18, 2017, 02:11 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
ஆரவ் காதல் விவகாரம்... அதிரடியாக முற்று புள்ளி வைத்தார் ஓவியா...

சுருக்கம்

oviya full stop the love rumors

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் தனக்கு கிடைத்த வரவேற்பிற்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஓவியா தற்போது அவருடைய வீட்டில் இருந்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதில் ரசிகர்கள் மத்தியிலும், ஊடகங்கள் மத்தியிலும் எழுப்பப்பட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோவின் ஆரம்பத்திலேயே தனக்கு இந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்க வில்லை என்றும்  என்னை ஆதரித்த அனைவருக்கு நன்றி என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், இந்த நிகழ்ச்சியில் இருந்து நான் வெளியேறிய பிறகு ஜூலி மற்றும் சக்தி ஆகியோர் வெளியேற்ற பட்டனர். அவர்களை தயவு செய்து எதிரியாக பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக கூறி தன்னுடைய ரசிகர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.

பின் நான் மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கும் வருவேனா..? என பலர் கேட்கின்றனர், ஆனால் நான் கண்டிப்பாக ஒரு போட்டியாளராக மீண்டும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் போக மாட்டேன், நீங்கள் திரைப்படங்களில் என்னை பார்க்கலாம்,  தற்போது திரைப்படங்களில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளதாக தெரிவித்து, தன்னுடைய செல்ல பிராணியையும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

இதனை தொடர்ந்து, ஆராவை உண்மையாக காதலிக்கிறீர்களா, என்றும் தற்போது பிக் பாஸ்ஸை விட்டு வெளியேறியதும் நான் ஆரவை மறந்து விட்டதாகவும் பல தகவல்கள் வெளிவந்து. ஆனால் தற்போது வரை நான் ஆரவை காதலிக்கிறேன் என்றும் என்றுமே உண்மை காதல் தோற்காது என நம்புவதாக கூறி, ஓவியாவின் காதல் பற்றி எழுப்பப்பட்ட வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!