
"அன்பிற்கு முன்னாடி தான் நான் எலி... பகைக்கு முன்னாடி நான் புலி" இது விஜய் படத்தில் வரும் வசனமா இருந்தாலும் இப்போது ஓவியாவுக்கு அருமையாக பொருந்தியுள்ளது.
பாசத்திற்கு ஏங்கும் ஓவியாவுக்கு அங்கிருந்து ஹவுஸ் மேட்ஸ் இது வரை திட்டுகளையும், தனிமையையும் மட்டுமே பரிசாக கொடுத்துள்ளனர். ஒரு நிலையில் ஓவியா இந்த வீட்டில் இருந்தால் நாங்கள் சமைக்க மாட்டோம், எந்த ஒரு வேலையையும் செய்யமாட்டோம் என கூறி போராட்டம் நடத்த போகும் அளவிற்கு இறங்கி பேசி வந்தனர்.
அடுத்தவர்களுக்கு கஷ்டம் கொடுக்க கூடாது என நினைத்த ஓவியா அவரையே தண்டித்துக்கொள்ளவும், ஆரவ் மேல் வாய்த்த காதல் தோல்வி அடைந்தாலும் நீச்சல் குளத்தில் இறங்கி தற்கொலைக்கு முயற்சி செய்தது மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது.
இதை பார்த்த அவருடைய ரசிகர்கள் பலர், " கவலை படாதீங்க ஓவியா உங்களுக்கு பாசம் காட்ட நாங்கள் இருக்கிறோம்", "வெளியே வந்து பார் உனக்கு பாசம் காட்ட எத்தனை பேர் என்று" கூறி பலர் ஓவியாவிற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.