
நடிகை ஓவியாவிற்கு வெறித்தனமான ரசிகர்கள் பலர் உள்ளனர். அவர்களின் அன்பை உணர்ந்து ஓவியாவும் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடைய ரசிகர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து வருகிறார்.
இவருக்கு இப்படிப்பட்ட ரசிகர்கள் கிடைக்கக் காரணம் 100 நாட்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட 'பிக் பாஸ்' என்கிற நிகழ்ச்சி தான். இதில் ஓவியா முதலில் ரசிகர்கள் மத்தியில் சரியாக கவனிக்கப்படா விட்டாலும் போகப் போக அவருடைய குணமும், நல்ல நடத்தைகளும் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கு ஆதரவு கொடுக்கும் விதத்தில் அமைந்தது.
தற்போது ஓவியா நடிகர் லாரன்ஸுடன் காஞ்சனா 3 படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார், அதே போல் பல்வேறு படங்களில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மேலும் விளம்பரங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது ஓவியா நடித்துள்ள ஒரு விளம்பரம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளது எனக் கூறலாம். பிரபல வணிக நிறுவனத்திற்காக இவர் நடித்துள்ள இந்த விளம்பரத்தில் மோகன் லால் நடித்த படத்தில் மிகவும் பிரபலமான ஜிமிக்கி கம்மல் பாடல் வார்த்தைகள் மாற்றப்பட்டு, பாடி, அதற்கு ஓவியா நடனமாடியுள்ளார்.
இந்த நடனம் ஓவியா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
வீடியோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.