பிக் பாஸ் சீசன் 2 எப்படி? ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓவியாவின் பளிச் பதில்..!

Published : Aug 24, 2018, 02:13 PM ISTUpdated : Sep 09, 2018, 07:22 PM IST
பிக் பாஸ் சீசன் 2 எப்படி? ரசிகர்களின் கேள்விகளுக்கு ஓவியாவின் பளிச் பதில்..!

சுருக்கம்

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உச்ச கட்ட புகழை அடைந்தவர் நடிகை ஓவியா. இவர் தற்[போது களவாணி2, காஞ்சனா 3 மற்றும் 90ml ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸை விட்டு வெளியே வந்த ரைசா நடித்த படம் கூட ரிலீசாகிவிட்டது.   

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் உச்ச கட்ட புகழை அடைந்தவர் நடிகை ஓவியா. இவர் தற்[போது களவாணி2, காஞ்சனா 3 மற்றும் 90ml ஆகிய படங்களில் நடித்து வருகிறார். ஓவியாவிற்கு பிறகு பிக் பாஸை விட்டு வெளியே வந்த ரைசா நடித்த படம் கூட ரிலீசாகிவிட்டது. 
ஆனா நம்ம தலைவி நடித்த படம் எதுவுமே இன்னும் ரிலீசாகவில்லையே என சோகத்தில் இருக்கின்றனர் ஓவியா ரசிகர்கள். 

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவது தான் ஓவியாவின் ஸ்டைல் என சமாதானம் ஆகி இருக்கும் அவர்களுக்கு ஓவியாவின் சமீபத்திய டிவிட்டர் உரையாடல் மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.


 ரசிகர்களின் கேள்விகளுக்கு வழக்கம் போலவே மிகவும் வெளிப்படையாக பதிலளித்த ஓவியாவிடம் தற்போது ஒளிபரப்பாகிவரும் பிக் பாஸ் சீசன் 2 பற்றி சில கேள்விகள் கேட்கப்பட்டிருக்கிறது. 

இதற்கு பதிலளித்த அவர் யாரையும் மற்றவருடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் எல்லோருமே தனித்தன்மை உடையவர்கள் தான் என கூறி இருக்கிறார்.
 மும்தாஜ் இந்த சீசனில் கொஞ்சம் நல்ல போட்டியாளர் ஆனால் ஓவியா அளவிற்கு யாரும் இல்லை என ஒரு ரசிகர் கூறியதற்கு தான் ஓவியா இப்படி பதிலளித்திருக்கிறார்.

கேரளாவில் இருக்கும் உங்கள் குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்கின்றனரா என ஒரு ரசிகர் கேட்ட கேள்விக்கு அனைவரும் நலம் என கூறி நன்றி தெரிவித்த ஓவியாவிடம் , பிக் பாஸ் 2 குறித்து கூடுதல் கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. 
மேலும் சிலர் தொடர்ந்து பிக் பாஸ் பற்றி கேள்வி கேட்டதற்கு நான் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பதே இல்லை என பதிளித்திருக்கிறார் ஓவியா. இப்படி ஒரு பதிலை ஓவியா கூறுவார் என யாருமே எதிர்ப்பார்க்கவில்லை என்பது தான் உண்மை. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!