ஊமை விழிகள் 1986ம் ஆண்டு வெளிவந்த தமிழ் திரில்லர் திரைப்படம். இதை ஆபாவாணன் என்ற திரைப்படக் கல்லூரி மாணவர் தன் கல்லூரி மாணவர்களை கொண்டு எடுத்தார்.
இதில் விஜயகாந்த் முதன்மையான வேடத்தில் நடித்தார். அருண் பாண்டியன், கார்த்திக், ஜெய்சங்கர், சரிதா, இரவிச்சந்திரன், மலேசியா வாசுதேவன், சந்திர சேகர், விசு, கிஷ்மு, சச்சு, சிறீ வித்யா, டிஸ்கோ சாந்தி, இளவரசி, தேங்காய் சீனிவாசன், சசிகலா போன்றோர் இதில் நடித்தனர்.
இப்போது இதே தலைப்பில் மீண்டும் தமிழில் படம் எடுக்கப்படுகிறது. ஆனால் இந்தப் படம் ஊமை விழிகளின் ரீமேக்கோ தொடர்ச்சியோ அல்ல. புதிய படம். இந்தப் படத்தின் தலைப்பு மட்டுமே ஊமை விழிகள்.
ஆகாஷ் சாம் என்பவர் இயக்கும் இந்தப் படத்தில் நடிகராக பிரபு தேவாவும் விஷ்ணு ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவும் செய்கின்றனர்.
இந்தப் படத்தில் பிரபு தேவாவுக்கு ஜோடி மம்தா மோகன்தாஸ். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் சினிமாவில் நடிக்க வந்துள்ளார்.