இழந்த சிறகை இணைக்க எண்ணி கைகளை நீட்டிய குழந்தை..!

By Thiraviaraj RM  |  First Published Apr 25, 2020, 7:47 PM IST

சுற்றி இருப்பவர்கள் அவனப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள். அவன் ஒரு தலை சிறந்த பாடகன் என்று அவர்கள் அறிந்து இருக்கவில்லை. 
 


தமிழ்ப்பாடல் - அழகும் ஆழமும்: -21. கல்லும் கனியாகும். 

இரண்டு நல்ல பாடகர்கள் - டி.எம்.சௌந்தரராஜன் & ஏ.எல்,ராகவன் - இணைந்து ஒரு படம் தயாரித்தார்கள். 1968 இல் வெளிவந்த - 'கல்லும் கனியாகும்'. தயாரிப்பாளர்கள் இருவருமே பாடகர்கள் என்றால் படக் கதையும் அதை ஒட்டித்தானே இருக்கும்...? இருவருமே படத்தில் பிரதான வேடம் ஏற்று நடிக்கவும் செய்தார்கள். 

Tap to resize

Latest Videos

பாடல்கள் - கண்ணதாசன், வாலி, புலமைப்பித்தன்.இசை - எம்.எஸ்.விஸ்வநாதன். படமே இசையை மையமாக வைத்து இருந்ததால், பாடல்கள் அனைத்தும் பிரமாதமாக அமைந்தன. 'நான் கடவுளைக் கண்டேன், குழந்தை வடிவிலே..' 
'கை விரலில் பிறந்தது நாதம்..' ஆகியன மிகப் பிரபலம் ஆயின. இவற்றை எல்லாம் விஞ்சி நின்றது - புலமைப்பித்தன் இயற்றிய 
'எங்கே நான் வாழ்ந்தாலும்..'. 

அவன் கைதேர்ந்த பாடகன்; ஆனால் வாழ்க்கை அவனைத் துரத்திக் கொண்டே இருந்தது. ஏறக்குறைய ஒரு பிச்சைக்காரனைப் போல் திரிந்து கொண்டு இருந்தான். ஒரு குழந்தைக்கு அவனை மிகவும் பிடித்துப் போனது. தனது பிறந்த நாளுக்கு வீட்டுக்கு அழைத்து, அவனைப் பாடச் சொல்கிறாள். சுற்றி இருப்பவர்கள் அவனப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறார்கள். அவன் ஒரு தலை சிறந்த பாடகன் என்று அவர்கள் அறிந்து இருக்கவில்லை. 

குழந்தையின் வற்புறுத்தல், பெரியவர்களின் ஏளனச் சிரிப்பு... இரண்டுக்கும் இடையே நின்று அவன் பாடுகிறான். அடடா...! தனது குரலால், மெய் சிலிர்க்க வைக்கிறார் டி.எம்.எஸ். திரையிலும் எல்.ராகவன் பாராட்டுவதில் பார்க்க முடியும்.

ஆஹா... இதுவல்லவோ பாடல்! 
கேட்டுப் பாருங்கள் - நிச்சயம் மெய் சிலிர்க்கும். 
இதோ பாடல் வரிகள்:  

எங்கே நான் வாழ்ந்தாலும் 
என் உயிரோ பாடலிலே 
பாட்டெல்லாம் உனக்காக 
பாடுகிறேன் எந்நாளும் 
பாடுகிறேன் என்னுயிரே. 

இனிமை கொஞ்சும் இளமை நெஞ்சில் 
உலகம் எல்லாம் காணுகிறேன். 
நிலவும் வானும் கடலும் இங்கே 
உலகம் என்றால் நாணுகிறேன். 

சிறகு இல்லா பறவை போலே
உறவு தேடி ஓடி வந்தேன். 
இழந்த சிறகை இணைக்க எண்ணி 
உனது கையை நீட்டுகிறாய். 

மனிதன் எங்கே மனிதன் எங்கே 
இறைவனை நான் கேட்டிருந்தேன்
படைத்து வைத்தும் கிடைக்கவில்லை 
அவனும் இங்கே தேடுகிறான் 


மழலை உன்னை காட்டுகிறான்.

(வளரும்.

 
பாஸ்கரன் கிருஷ்ணமூர்த்தி.  

இதையும் படியுங்கள்:-

1.ஔவையாருக்கு கே.பி.சுந்தராம்பாள்... அகத்தியருக்கு சீர்காழி கோவிந்தராஜன்..!

2.

3.வாழ்க்கையில் எத்தனையோ வழிகள்... பழக்கத்தை விட்டு விடலாம்... பாசத்தை விட முடியுமா..?

click me!