
தமிழ் சினிமாவில் அழகோடு திறமையும் வாய்ந்த நடிகை என்றால் அது ஆண்ட்ரியா என்று சொல்லலாம் அதோடு மாறுப்பட்ட கதாபாத்திரங்களிலும், வித்தியாசமான வேங்களிலும் நடிக்க வேண்டும் என சில நடிகைகள் தான் விரும்புகின்றனர். அந்தவகையில் நடிகை ஆண்ட்ரியா எப்போதுமே வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கில்லாடி.
கடந்தாண்டு ராம் இயக்கத்தில், தரமணி படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டை பெற்றது. இந்நிலையில் சமீபத்தில் மகளிர் தினம் தொடர்பாக சென்னையில் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகை ஆண்டரியா. அப்போது அவர் பேசும்போது, சினிமாவில் பெண்களுக்கு இன்னும் முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இந்த சினிமாவுலகிலும் ஆணாதிக்கம் நிறைந்ததாகவே இருக்கிறது. ஒரு நடிகையின் திறமை அவர் எந்த ஹீரோவுடன் நடிக்கிறார் என்பதை பொறுத்தே இங்கு தீர்மானிக்கப்படுகிறது.
நான் கடைசியாக நடித்திருந்த தரமணி படத்திற்கு நிறைய பாராட்டுகள் கிடைத்தன. ஆனால் அதன்பின்னர் ஒரு பட வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. நான் கவர்ச்சியாக ஆடை அணிந்து நடிப்பதால் மட்டும் மகிழ்ச்சி அடைந்து விடுவேன் என எதிர்பார்க்காதீர்கள். ஒருபோதும் எனக்கு அதில் மகிழ்ச்சி இல்லை.திரையில் நான் நிர்வாணமாக கூட நடிக்க தயார் ஆனால் கதையில் அந்த நிர்வாணக் காட்சி மிகவும் அவசியமானதாக இருக்க வேண்டும் என பேசி அந்த விழாவில் சர்ச்சையைக் கிளப்பினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.