
'பிக் பாஸ்' நிகழ்ச்சிக்காக, பிரத்தேயகமாக பூந்தமல்லி அருகே, மிக பிரமாண்ட செட் அமைக்கப்பட்டு போட்டியாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு அவர்களுக்கான அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது. அதே போல் போட்டியாளர்களுக்கு வெளியுலக தொடர்பும் சுத்தமாக துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இது காலை, எது மாலை என்கிற நேரம் கூட போட்டியாளர்களுக்கு தெரியாது.
மேலும் புகைப்பிடிக்கும் போட்டியாளர்களுக்காக தனி அறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புகையிலை கண்காணிப்புக் குழு பிக்பாஸ் வீட்டினுள் இருக்கும் புகைப்பிடிக்கும் அறை சட்ட விரோதமானது என்று நிகழ்ச்சியின் தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
"இந்த நிகழ்ச்சி உலகம் முழுவதும் அதிகமான பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது. குறிப்பாக பல குழந்தைகள் பார்க்கின்றனர். இது அவர்களிடையே ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்" என நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.