பாஜகவில் இருந்து விலகவில்லை !! அந்தர் பல்டி அடித்த காயத்ரி ரகுராம் !!

Published : May 08, 2019, 11:43 PM IST
பாஜகவில் இருந்து விலகவில்லை !! அந்தர் பல்டி அடித்த காயத்ரி ரகுராம் !!

சுருக்கம்

அரசியலை நன்க கற்றுக் கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக் கொண்டேனே தவிர நான் ஒன்றும் பாஜகவில் இருந்து விலகவில்லை என நடிகை காயத்ரி ரகுராம் தெரிவித்துள்ளார். மேலும் சுப்ரமணியன் சாமியிடம் அரசியல் கறுக் கொள்ள விரும்பிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழில் சார்லி சாப்ளின், ஸ்டைல், பரசுராம், விசில் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் காயத்ரி ரகுராம். நடன இயக்குனராகவும் இருந்து வருகிறார்.  அது மட்டுமல்லாமல் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்று பிரபலம் அடைந்தார்.

அதே நேரத்தில் காயத்ரி  பாஜகவில் இணைந்தார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை ஆதரித்து சமூக வலைத்தளத்தில் கருத்துகளும் பதிவிட்டு வந்தார்.
அண்மையில்  அவருக்கும் தமிழக பாஜக  தலைவர் தமிழிசை  சவுந்தரராஜனுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் காயத்ரி ரகுராம் திடீரென்று அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். நான் அரசியலில் இருந்து விலகி வெளியில் இருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். அதற்காக கொஞ்சம் இடைவெளி எடுத்துக்கொள்கிறேன். நான் எந்த கட்சியையும் ஆதரிக்கப்போவது இல்லை என்று கூறினார்.

ஆனால் இன்று அதிரடியாய் பல்டி அடித்த காயத்ரி, அரசியல் பற்றி கற்றுக்கொள்ள ஒரு இடைவெளி எடுத்துக்கொண்டேனே தவிர, பாஜகவிலிருந்து விலகவில்லை எனன்று தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியிடம் அரசியல் கற்க விரும்புகிறேன் என்று நடிகை காயத்ரி ரகுராம் குறிப்பிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தாராவை பகடைக்காயாக பயன்படுத்தி எஸ்கேப் ஆக பார்க்கும் கதிர்... தட்டிதூக்கினாரா கொற்றவை? எதிர்நீச்சல் தொடர்கிறது
கடத்தப்படும் கிரிஷ்... விஜயா மீது முத்துவுக்கு வந்த டவுட்; கடத்தியது யார்? - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்