உண்மையா காதலிச்ச பாவத்துக்கு தீயில் கருகிய காதலன்! கடைசி நிமிடம்! நிலானி குறித்து சொன்னது என்ன?

Published : Sep 17, 2018, 04:34 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
உண்மையா காதலிச்ச பாவத்துக்கு தீயில் கருகிய காதலன்! கடைசி நிமிடம்! நிலானி குறித்து சொன்னது என்ன?

சுருக்கம்

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், போலீஸ் அதிகாரி, அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தன்னை பிரபல படுத்திக்கொள்ள வேண்டும் என சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில், காக்கி சட்டை அணிந்தபடி ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டார். 

பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், போலீஸ் அதிகாரி, அண்ணி, அக்கா போன்ற வேடங்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. இவர் சமீபத்தில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது தன்னை பிரபல படுத்திக்கொள்ள வேண்டும் என சர்ச்சையை ஏற்படுத்தும் விதத்தில், காக்கி சட்டை அணிந்தபடி ஒரு வீடியோவை எடுத்து வெளியிட்டார். பின் தலைமறைவாக இருந்த இவரை போலீசார் கைது செய்து செய்தனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள், நேற்று தன்னுடைய ஆண் நண்பர் ஒருவர் தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி வருவதாக மயிலாப்பூர் போலீஸ் நிலையம் சென்று புகார் செய்தார்.  

இந்நிலையில் இவருடைய காதலன் நிலானி திருமணம் செய்துகொள்ள சம்மதம் தெரிவிக்காததால், சென்னை கே.கே.நகர் பகுதியில் பெட்ரோலை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயற்சி செய்தார். இவர் இருந்ததை பார்த்து அக்கம் பக்கம் இருந்தவர்கள் உடனடியாக அவர் உடலில் எறிந்த தீயை அணைத்து, அவரை சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

50 சதவீத தீ காயங்களுடன் அனுமதிக்கப்பட்ட நிலானியின் காதலர் காந்தி லலித் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். இவர் கடைசி நிமிடத்தில் இவரை மருத்துவமனையில் சேர்க்க கொண்டு சென்றவர்களிடம் நிலானி நிலானி என்றே புலம்பி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடைசி நிமிடத்தில் நிலானியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் தனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். 

அதேபோல் ஏற்கனவே பலமுறை நிலானியிடம் நீ இல்லாமல் வாழ முடியாது என அவர் வாதிட்டும், நிலானி  இவரை காதலித்து ஏமாற்றியதால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக நெருங்கிய வட்டாரத்தில் கூறுகின்றனர். 

இவருடைய நண்பர்கள் சிலர் காதலித்த பாவத்திற்காக, லலித் இன்று தீயில் கருகி உயிர் இழந்து விட்டதாக தங்களுடைய வேதனையை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி