
சந்தியா காதில் ரகசியத்தை போட்டுடைத்த பாத்திமா பாபு..!
பிரபலங்கள் என்றாலே .. சினிமாவில் நடிப்பவர்கள் தான் முதலில் நமக்கு நினைவுக்கு வரும் .. ஒரு சிலருக்கு அரசியல்வாதிகள் நினைவுக்கு வரும். ஆனால் அதை எல்லாம் தாண்டி மக்கள் மனதில் இன்றளவும் நீங்கா இடம் பிடித்து உள்ள செய்திவாசிப்பாளர்கள் பலர் இருந்தாலும், ஒரு சிலரை மறக்க முடியுமா...?
ஆம்... செய்தி வாசிப்பாளர் பாத்திமா பாபு மற்றும் சந்தியா ராஜகோபால் பற்றித்தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். தங்கள் காலடி படாத சேனலே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆரம்ப கால கட்டத்தில் இருந்து இன்று வரை செய்தி வாசிப்பையே தங்கள் உயிர் மூச்சாக சுவாசித்து வந்துள்ளனர்..
செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு
இவரது அழகில் மயங்காதவர்கள் இல்லை.. இவரது செய்தி வாசிப்பை கேட்காதவர்களும் இல்லை.. அந்த அளவிற்கு திறமை மிகுந்த பாத்திமா பாபு அவர்கள் செய்தி வாசிப்பு மட்டுமின்றி அரசியல் நடிப்பு என அனைத்திலும் ஒரு வலம் வருகிறார்...
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு பிடித்த செய்திவாசிப்பாளரும் கூட.. சமீபத்தில் கூட பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக கலந்துக்கொண்டு முதல் ஆளாய் வெளியேறினார். அன்றும் இன்றும் என்றும் மக்கள் மனதில் ஸ்டார் செய்திவாசிப்பாளர் பாத்திமா பாபு என்பதில் எந்த வித மாற்று கருத்தும் கிடையாது.
செய்திவாசிப்பாளார் சந்தியா ராஜகோபால்..!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு மிகவும் பிடித்த செய்தி வாசிப்பாளர். நேரடியாக ஜெயலலிதாவுடன் பேசும் அளவிற்கு அவருடனான நட்பு கொண்டவர். தன்னுடைய காந்த குரலால் செய்தி வாசிக்கும் போது செய்தியையே மெருகேற்றுபவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட சந்தியா அவர்களும் பாத்திமா அவர்களும் சமீபத்தில் நடந்த செய்திவாசிப்பாளர் சங்கத்தின் 4 ஆம் ஆண்டுவிழாவில் கலந்துக் கொண்டனர்.
இந்த விழாவில் அழகோவியம் விருதினை பாத்திமா பாபு அவர்களுக்கும், காந்த குரலுக்கான விருதினை சந்தியா ராஜகோபால் அவர்களுக்கும் வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் எதிர்பாராத விதமாக சிக்கிய புகைப்படம் தான் இப்போதைக்கு ஒரு ஹாட் டாபிக்....
அதாவது பாத்திமா அவர்கள் ஏதோ ஒரு முக்கியமான விஷயத்தை சந்தியா ராஜகோபால் அவர்களின் காதில் ரகசியமாக சொல்ல... அதை கேட்டு அப்படியே ஷாக் ரியாக்ஷன் கொடுக்கிறார் சந்தியா. இந்த ரியாக்ஷன் போட்டோவை பார்ப்பவர்கள் எல்லாம் அப்படி என்ன விஷயத்தை ரகசியமாக சொல்லி இருப்பாரோ பாத்திமா? என விமர்சனம் செய்ய தொடங்கி உள்ளனர்.
ரகசியத்தை இப்படி போட்டோ போட்டு வெட்ட வெளிச்சமாக்கி விட்டீரே கேமராமேன்...!
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.