
பிரபல கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் (46) மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செய்தி காலை வெளியானதில் இருந்தே, பல ரசிகர்கள் மருத்துவமனை முன் கூடிய நிலையில், அவர் இறந்த தகவல் வெளியானதும் கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் மருத்துவமனையை சூழ்ந்தது. பலர் கண்ணீர் மற்றும் கவலையும் மருத்துவமனையிலேயே நின்றபடி உள்ளனர். எனவே 'விக்ரம்' மருத்துவ மனையில் சுற்றிலும் போலீஸ் பாதுக்காப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்: மருத்துவமனை முன் அலைமோதும் கூட்டம்..! புனித் ராஜ்குமாரின் மரண செய்தியை கேட்டு துடித்து போன ரசிகர்கள்! வீடியோ..
இன்று காலை, உடல் பயிற்சியில் ஈடுபட்ட போது... சாதாரண நெஞ்சு வலி காரணமாகவே மருத்துவமனையில் புனீத் ராஜ்குமார் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர் வெளியான தகவலில் புனீத் ராஜ்குமார் மிகவும் கவலைக்கிடமான நிலையில் தான் மருத்துவமனையில் சேர்க்காட்டதாக கூறப்பது. எப்படியும் உடல் நலம் தேறி வீடுதிரும்புவார் என கன்னட திரையுலகமே பவர் ஸ்டாருக்காக காத்திருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
மேலும் செய்திகள்:ஒரு ஜாடையில் டாப்ஸி... ஒரு ஜாடையில் மாளவிகா மோகனன்!! ஹீரோயினாகும் கிரிக்கெட் வீரர் சகோதரின் கவர்ச்சி அலப்பறை!!
மேலும் இறந்த தகவல் வெளியானதும் பெங்களூரில் உள்ள, அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், புனீத் ராஜ்குமாரின் தீவிர ரசிகையாக செய்தி வாசிப்பாளர் ஒருவர், அவர் இறந்த செய்தியை படித்து முடித்தவுடன், நேரலையில் கண்ணீர் விட்டு கதறி அழுத வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: சேலைக்குள் சோலையாய் புன்னகை பூத்த வாணி போஜன்!! சிகப்புச் சேலையில் கௌதமியை நினைவுபடுத்துறாங்களே!!
குழந்தை நட்சத்திரமாக இருந்து, ஒரு ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடிப்பது என்பதும்... வாரிசு நடிகர் என்கிற பிம்பத்தை உடைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மனதை கவர்ந்த இவரது மரணத்திற்கு தொடர்ந்து அனைத்து திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.