
ஆபாசமாக கருத்து பதிவிட்ட ஒருவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் நடிகை கஸ்தூரி. திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித்துக்கு ரசிகர்கள் ஏராளம். இந்நிலையில் அஜித் ரசிகர் என்ற பெயரில் இருக்கும் ட்விட்டர் பதிவில், ஆபாசமான ட்வீட் ஒன்று பதிவிடப்பட்டுள்ளது. இந்தப் பதிவில் தனது பெயரை சம்பந்தப்படுத்தியதற்காக நடிகை கஸ்தூரி வார்த்தைப் போரைத் தொடங்கினார்.
அஜித் ரசிகர் என்று சொல்லி அவரது பெயரை கெடுக்க வேண்டாம் என்று கடுமையான வார்த்தைகளால் எச்சரித்த நடிகை கஸ்தூரி, அவரது டுவிட்டர் பதிவியில் #DirtyAjithFans என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியது தல ரசிகர்களை சூடேற்றியது.
இதைப்பார்த்த நெட்டிசன்களில் சிலர், உண்மையான அஜித் ரசிகர்கள் இப்படி பதிவிடமாட்டார்கள் என்றும், யாரோ ஒருவர் செய்த தவறுக்காக ஒட்டுமொத்த ரசிகர்களையும் நீங்கள் எப்படி அசிங்கப்படுத்தலாம் என்று கேள்வி எழுப்பினர். ரொம்பவும் கேவலமாக பேசிய சிலரது பதிவுகளை ட்விட்டர் நிர்வாகத்திடம் புகாராக அளித்துள்ளார்.
இந்த விஷயத்தில் அஜித் குமார் மற்றும் ஷாலினி அவர்கள் தலையிட்டு ஆபாசமாக கருத்துக்களை பதிவு செய்பவர்களுக்கு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன் என்று கேட்டுக்கொண்டிருந்தார். அப்படியும் ஆத்திரம் அடங்காத கஸ்தூரி, "அஜித் இதை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். இது தீவிர ரசிகர்களிடையேயான சண்டை அல்ல. இது பாலியல் அத்துமீறல். நான் மட்டுமல்ல, பெண்கள் பலரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்" என்று பதிவிட்டார்.
கஸ்தூரியின் இந்த செயலால் கடுப்பான நெட்டிசன்கள் சிலர் அவரை மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர். யாரோ ஒருவன் பேசியதற்காக தேவையில்லாமல் அஜித்தின் பெயரை வைத்து கஸ்தூரி பப்ளிசிட்டி தேடுவதாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும் அஜித்தின்போட்டோவை புரோபைல் பிக்சராக வைத்துக் கொண்டு எவன் பேசினாலும், #DirtyAjithFans என திட்டுவீர்களா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.