எவன் எப்படி போனா எனக்கென்ன... மிக்ஜாம் புயலால் 2 ரீல்ஸ் தேறுச்சு - ஷிவானியின் செயலால் கடுப்பான நெட்டிசன்கள்

By Ganesh A  |  First Published Dec 8, 2023, 9:45 AM IST

மிக்ஜாம் புயலால் சென்னையே வெள்ளத்தில் தத்தளித்து வரும் சூழலில், ஜாலியாக டான்ஸ் ஆடி வீடியோ போட்ட நடிகை ஷிவானியை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.


சென்னையில் மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தத்தளித்து வருகின்றனர். வெள்ளம் வந்த 5 நாட்கள் ஆகியும் நீர் வடியாததால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.

வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் சினிமா பிரபலங்களும் வழங்கி வருகின்றனர். குறிப்பாக இயக்குனர் பார்த்திபன், விஜய் டிவி பிரபலங்களான பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா, நடன இயக்குனர் கலா மாஸ்டர் என ஏராளமானோர் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உணவு, பால் போன்ற பொருட்களை வழங்கி வருகின்றனர்.

Latest Videos

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுதவிர சாந்தனு, கிஷன் தாஸ், துணிவு பட நடிகர் வீரா, ஆர்.ஜே.விஜய், விஜே அஞ்சனா, ஜெயிலர் பட நடிகை மிர்ணா ஆகியோர் சமூக வலைதளங்கள் மூலம் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க மறுபுறம் இந்த மிக்ஜாம் புயலில் ஜாலியாக ஆட்டம் போட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட நெட்டிசன்களிடம் செம்ம திட்டு வாங்கி இருக்கிறார் நடிகை ஷிவானி.

நேற்று முன் தினம் அவர் வெளியிட்ட வீடியோவுக்கே நெகடிவ் கமெண்ட் அதிகம் வந்த நிலையில், தற்போது மழையில் ஆட்டம் போடும் மற்றொரு வீடியோவை பதிவிட்டு நெட்டிசன்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார் ஷிவானி. இதுபோன்ற காலகட்டத்தில் பிறருக்கு உதவவில்லை என்றாலும் இதுபோன்று வீடியோக்கள் பதிவிடுவதை தவிர்க்க வேண்டும் என ஷிவானிக்கு பலரும் புத்திமதி சொல்லி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... அட்டகத்தி ஆக தொடங்கி சினிமாவில் ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் பா.இரஞ்சித் - அவரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

click me!