'நேர்கொண்ட பார்வை' கிடைத்த யு/ஏ சான்றிதழ்!

Published : Jul 17, 2019, 07:09 PM IST
'நேர்கொண்ட பார்வை' கிடைத்த யு/ஏ சான்றிதழ்!

சுருக்கம்

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.  

அஜித் நடிப்பில் இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'நேர்கொண்ட பார்வை'.  இந்த படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்துள்ளார்.

இந்த திரைப்படம் ஏற்கனவே ஆகஸ்ட் மாதம் 10 தேதி, வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், ஒரு சில காரணங்களால் திடீர் என ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு,  ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்தனர்.

இந்த படத்தின் ரிலீஸ் தேதிக்கு இன்னும் ஒருசில நாட்களே இருப்பதால் இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் , இந்த படத்தை சென்சார் அதிகாரிகளின் சான்றிதழுக்காக அனுப்பி வைத்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த படத்தின் சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ஆகஸ்ட் 8-ம் தேதி படம் ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

16 வருஷமா ஒரே Playist தான் – அதுவும் இவங்க 2 பேர் சாங்க்ஸ் – ஓபனாக பேசி வசமாக மாட்டிக்கிட்ட ஜனனி அசோக் குமார்!
தமிழ் சின்னத்திரையில் முதல் 5 இடங்களை பிடித்த டாப் 5 நடிகர், நடிகைகள் யார் யார் தெரியுமா?