
நடிகை அமலாபால் விவாகரத்திற்கு பின் நடிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். தனுசுடன் ‘வேலையில்லா பட்டதாரி-2’, ‘வடசென்னை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
இதை தொடர்ந்து ‘திருட்டுபயலே-2’ மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். மேலும் மலையாளத்தில் நயன்தாரா நடித்து வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.
இந்த படத்தை இயக்குனர் சித்திக் இயக்குகிறார் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் மற்றொரு புதிய படத்திலும் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் அமலாபால் . இது நகர பின்னணியில் நடக்கும் அட்வேஞ்சர் கதையாம். நாயகியை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது.
நயன்தாராவுக்காக உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவர் நடிக்க மறுத்து விட்டதால் . இப்போது அந்த வேடத்தில் அமலாபால் நடிக்கிறார்.இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்குகிறார். விரைவில் இந்த படம் குறித்து அதிகார பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.