
கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா தற்போது நடித்து வரும் படங்களில் ஒன்று 'கொலையுதிர்க்காலம்'. இந்த படத்தை சக்ரி டோலட்டி இயக்கி வருகிறார், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர் ராஜா தயாரித்து வருகிறார்.
இந்த படம் தமிழில் மட்டுமின்றி இந்தியிலும் உருவாகவிருப்பதாகவும், தமிழில் நயன்தாரா நடித்து வரும் கேரக்டரில் தமன்னா நடிக்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியது. தற்போது இந்த படத்தின் வில்லனாக பிரபுதேவா நடிக்கவுள்ளராம்.
தமிழில் வில்லன் கேரக்டருக்கு இதுவரை நடிகர் தேர்வு செய்யப்படவில்லை. என்பதாலும் தென்னிந்தியா முழுவதும் பிரபுதேவாவுக்கு மார்க்கெட் இருப்பதால் அவரே தமிழிலும் வில்லனாக நடிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் பிரபுதேவா - நயன்தாரா இருவரும் காதலித்து வந்தனர் என்பது அனைவரும் அறிந்தது தான் பின்னர் இந்த காதல் திருமணம் வரை சென்றது.
ஆனால் திடீரென எதிர்பாராத நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின்னர் பாலிவுட்டில் பிரபுதேவாவும், கோலிவுட்டில் நயன்தாராவும் பிசியாகிவிட்டனர். இந்த நிலையில் தற்போது 'கொலையுதிர்க்காலம் படத்தில் நயன்தாராவும் பிரபுதேவாவும் மீண்டும் இவர்களா...? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.