பிரபல நடிகையின் வேடத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

By manimegalai a  |  First Published Aug 11, 2019, 12:12 PM IST

மலையாளத்தில் மிகவும் விறுவிறுப்பாக  உருவாகி வரும், "லவ் ஆக்ஷன் ட்ராமா ' படத்தில், நடிகை நயன்தாரா பிரபல நடிகை ஷோபாவின் வேடத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இயக்குனர் தயான் சீனிவாசன், இயக்கத்தில்  நடிகை நயன்தாரா "லவ்  ஆக்ஷன்  ட்ராமா " என்கிற மலையாளப் படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படம் தமிழிலும் தயாராகி வருகிறது.

Latest Videos

இது மறைந்த நடிகை சோபாவின் கதை என்று கூறப்படுகிறது. 
நடிகை சோபா வேடத்தில்,  நயன்தாரா நடித்து வருவதாக கூறப்படும் நிலையில், இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார்.  இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தை ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். பரவலாக இந்த படத்தில் நடித்து வரும் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்கள், என்ன என்பது,  அரசல்புரசலாக வெளியே வந்த போதிலும்,  நயன்தாரா கதாபாத்திரத்தை மட்டும் சஸ்பென்சாக வைத்துள்ளனர் படக்குழுவினர்.

இப்படம் திகில் மர்மங்கள் நிறைந்த படமாக தயாராகி  வருகிறது.  இப்படத்தை தயான் சீனிவாசன் இயக்கி வருகிறார் . 90 சதவீத படப்பிடிப்பு முடிவு பெற்று விட்ட நிலையில் இன்னும் சில தினங்களில் முழுவதும் முடிவடைந்து விடும்.  மேலும் போஸ்ட் ப்ரொடக்ஷான் பணிகளும் ஒருபக்கம் படுதீவிரமாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

click me!