ஜெயலலிதா வேடத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா! பேச்சுவார்த்தை தீவிரம்

By vinoth kumarFirst Published Oct 24, 2018, 12:14 PM IST
Highlights

இயக்குனர் லிங்குசாமி அடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வை படமாக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நயன்தாராவை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இயக்குனர் லிங்குசாமி அடுத்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வை படமாக்கவுள்ளதாக தகவல் வெளியான நிலையில் நயன்தாராவை ஜெயலலிதா வேடத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனர் என்.லிங்குசாமி. ஆனந்தம் படத்தில் தொடங்கிய இவரது சினிமா பயணம், சண்டக்கோழி 2 வரை நீண்டுள்ளது. 2005ஆம் ஆண்டு விஷால் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த படம் சண்டக்கோழி. அதன் இரண்டாம் பாகத்தை மீண்டும் விஷாலை வைத்தே எடுத்தார் லிங்குசாமி. இந்தப் படம் தற்போது திரையரங்குகளில் வெளியாகி ஓடிக் கொண்டிருக்கிறது. 

அஜித் குமார், சூர்யா, கார்த்தி என பிரபல நடிகர்களை இயக்கியுள்ள லிங்குசாமி அடுத்து இயக்கப் போவது யாரை என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆனால் அடுத்த படத்தில் நடிகர்களை அல்லாமல் முதல் முறையாக நடிகையை மையமாக வைத்து லிங்குசாமி திரைப்படத்தை இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இவர் எடுக்கவுள்ளதாக நெருங்கிய வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை ஏற்கெனவே இருவர் எடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒருவர் மதராசப்பட்டினம், கிரீடம் உள்ளிட்ட படங்களை இயக்கிய விஜய் மற்றொருவர் பெண் இயக்குனர் பிரியதர்ஷினி, இந்த நிலையில் லிங்குசாமியும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக்க முடிவு செய்து அதற்கான களப் பணிகளில் ஈடுபட்டு வருவதாக சொல்லப்படுகிறது. 

இதற்காக அவர் மாநில மற்றும் மத்திய அளவில் முக்கிய அரசியல்வாதிகளை அணுகி ஜெயலலிதாவைப் பற்றிய சுவாரசியமான தகவல்களை கேட்டு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஜெயலலிதா வேடமேற்கப் போவது யார் என்கிற தகவலும் கசிந்துள்ளது. அது வேறு யாருமல்ல தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா தானாம்.  இவர் ஏற்கெனவே அறம் படத்தில் மாவட்ட ஆட்சியர் வேடத்தில் நடித்து கைதட்டல்களை குவித்தவர்.

 

ஜெயலலிதாவின் ஆளுமையை நயன் தாரா தன் வேடத்தில் முழுமையாக உள் வாங்கிக் கொள்வார் என்பதால் அவர் இந்தப் படத்தில் நடிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இல்லாவிட்டால் பாலிவுட்டின் பிரபல நட்சத்திரம் வித்யா பாலன் நடிப்பார் என்று சொல்லப்படுகிறது.

இன்னும்சில நாட்களில் முழுமையான அறிவிப்பை எதிர்பார்க்கலாம் என்கிறது லிங்குசாமியின் நெருங்கிய வட்டாரம்..  ஏற்கனவே லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தியுடன் பையா படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் சம்பள பிரச்சனையால் லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க நயன்தாரா மறுத்தது குறிப்பிடத்தக்கது. விண்வெளி வீரர் வேடத்தில் நடிக்கும் சூப்பர் ஸ்டார்! விரைவில் படப்பிடிப்பு!

click me!