பாஞ்சாலி அவதாரமெடுக்கும் நயன்தாரா...

Asianet News Tamil  
Published : Jul 05, 2017, 11:34 AM ISTUpdated : Sep 19, 2018, 12:50 AM IST
பாஞ்சாலி அவதாரமெடுக்கும் நயன்தாரா...

சுருக்கம்

nayanthara aciting dhragubathi character

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தமிழ் மற்றும் இன்றி தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் மிகவும் பிஸியாக நடித்து வருபவர். இவரை தன்னுடைய படத்தில் கமிட் செய்வதற்காக பல முன்னணி நடிகர்கள் போட்டி போட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் ஆறு வருடத்திற்கு பிறகு மீண்டும் ஒரு கன்னட படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. குருஷேத்திரா என்று பெயரிட்டுள்ள இந்த திரைப்படம் மஹாபாரத சரித்திர கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறதாம்.

இயக்குனர் நாகண்ணா இயக்கவிருக்கும் இந்த படத்தில், கன்னட நடிகர் தர்ஷன் துரியோதனாகவும், நடிகர் ரவிச்சந்திரன் கர்ணனாகவும், மூத்த நடிகர் அம்ரீஷ் பீஷ்மராகவும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் இந்த திரைப்படத்தில் பாஞ்சாலி வேடத்தில் நயன்தாராவை நடிக்கவைக்க, படக்குழுவினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் இந்த திரைப்படம் குறித்து அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

சிவகார்த்திகேயன் படத்திற்குப் புதிய சிக்கல்! 'பராசக்தி' கதை என்னுடையது - உயர்நீதிமன்றத்தில் உதவி இயக்குநர் அதிரடி வழக்கு!
வரதட்சணை புகாரில் சிக்கிய பாண்டியன் குடும்பம்: மீனாவை மட்டும் பாக்கியம் விட்டு வைத்தது ஏன்? பின்னணியில் இருக்கும் 'மாஸ்டர் பிளான்'!