
தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் சில ஆண்டுகாலமாக காதல் இருந்து வருகிறது என்பது ஊரறிந்த உண்மை. எப்போதும் இவர்கள் இருவரும் ஒரு குறிப்பிட்ட நாளில் வெளிநாடுகளுக்கு சென்று சுற்றுப்பயணம் மேற்கொள்வதை பார்க்க முடிகிறது. அதுகுறித்த போட்டோஸ் அவரவர் ட்விட்டர் பக்கத்தில் அடிக்கடி பதிவிடுவார்கள்.
இது போன்று சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், தற்போது இந்த ஆண்டு இறுதிக்குள் நயன்தாராவிற்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இவர்கள் இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வருவதும் அதேவேளையில் இருவரும் இரண்டு முனைகளில் சினிமாக்களில் மிகவும் பிஸியாக இருந்து வருவதாலும் தங்களுடைய திருமணத்தை தள்ளி தள்ளி வைத்து வந்தனர்.
இதற்கிடையில் தமிழ் புத்தாண்டு அன்று விக்னேஷ் சிவன் இல்லத்தில் புத்தாண்டை கொண்டாடினார் நயன்தாரா. அப்போது திருமணத்தை பற்றி பேசப்பட்டதாகவும் இந்த ஆண்டு இறுதிக்குள் நிச்சயதார்த்தம் செய்துக்கொள்ள நயன்தாரா ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக விக்னேஷ் சிவன் மிகவும் குஷியாக உள்ளாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.