முடிவானது சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ ரிலீஸ் தேதி...

Published : Sep 21, 2019, 11:01 AM ISTUpdated : Sep 26, 2019, 11:43 AM IST
முடிவானது சிவகார்த்திகேயனின் ’நம்ம வீட்டுப் பிள்ளை’ ரிலீஸ் தேதி...

சுருக்கம்

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நேற்று தடபுடலாக வெளியான சூர்யா, கே.வி.ஆனந்த் காம்பினேஷனின் ரிசல்ட் முதலில் கலவையாக இருந்தாலும் இரண்டாவது மூன்றாவது காட்சிகளில் படம் படு தோல்வி என்பது உறுதியானது. அதுவரை தங்களது அடுத்த ரிலீஸ் குறித்து பலத்த மவுனம் காத்த சன் பிக்சர்ஸும், நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயனும் படத்தின் தோல்வியை உறுதி செய்ததும் முதலில் தங்கள் படத்துக்குக் கிடைத்த சென்சார் [யு] சர்டிபிகேட்டை வெளியிட்டனர்.  

ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் சூர்யாவின்’காப்பான்’ரிசல்டுக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருந்த சிவகார்த்திகேயனின் ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ வரும் வெள்ளியன்று ரிலீஸாகவிருப்பதாக அதன் தயாரிப்பு நிறுவனம் சன் பிக்சர்ஸ் அறிவித்துள்ளது. இப்படம் ஓரிரு வாரங்கள் தள்ளிப் போகக்கூடும் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில் ‘காப்பான்’தோல்வியை உறுதி செய்த சிவகார்த்திகேயன் தான் தயாரிப்பு நிறுவனத்துக்கு போன் செய்து இந்த வாரமே ரிலீஸ் செய்யலாம் என்று உற்சாகப்படுத்தியதாகத் தெரிகிறது.

லைகா புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் நேற்று தடபுடலாக வெளியான சூர்யா, கே.வி.ஆனந்த் காம்பினேஷனின் ரிசல்ட் முதலில் கலவையாக இருந்தாலும் இரண்டாவது மூன்றாவது காட்சிகளில் படம் படு தோல்வி என்பது உறுதியானது. அதுவரை தங்களது அடுத்த ரிலீஸ் குறித்து பலத்த மவுனம் காத்த சன் பிக்சர்ஸும், நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்த்திகேயனும் படத்தின் தோல்வியை உறுதி செய்ததும் முதலில் தங்கள் படத்துக்குக் கிடைத்த சென்சார் [யு] சர்டிபிகேட்டை வெளியிட்டனர்.

அடுத்தபடியாக இன்று காலை நாளிதழ்களில் நம்ம வீட்டுப்பிள்ளை ரிலீஸ் தேதி வரும் 27 என்று அதிகாரபூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யா படம் தோல்வி அடையவேண்டுமென்று சிவகார்த்திகேயன் வேண்டாத தெய்வமில்லை என்றும் இதற்காகவே தனது ரசிகர் மன்றத்தினரை பல தியேட்டர்களுக்கு அனுப்பி வேவு பார்த்ததாகவும் கிசுகிசுப்பாளர்கள் புரளியைக் கிளப்பிவிட்டு வருகின்றனர். ஏனெனில் இந்த 27ம் தேதியைத் தவறவிட்டுவிட்டால் வேறு வழியின்றி தீபாவளிப் படங்களுடன் தான் சி.கா. மோதவேண்டியிருந்திருக்கும். அப்படி ஒரு ரிஸ்கை எடுக்க சன் பிக்சர்ஸும், சி.கா.வும் விரும்பவில்லை.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Parasakthi: பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை.! ஒரு வாரத்தில் 'பராசக்தி' படைத்த பிரம்மாண்ட சாதனை!
S2 E692 Pandiyan Stores 2: "கொலை செய்யக்கூட தயங்கமாட்டேன்!" - தங்கமயில் குடும்பத்தை எச்சரித்த கோமதி!