காதலியை கரம்பிடித்தார் அகில்; ஜாம் ஜாம்னு நடைபெற்ற நாகார்ஜுனா மகன் திருமணம்!

Published : Jun 06, 2025, 12:31 PM IST
nagarjuna son akhil akkineni wedding

சுருக்கம்

நடிகர் நாகார்ஜுனா - நடிகை அமலா ஜோடியின் ஒரே மகனான அகில் அக்கினேனியின் திருமணம் இன்று ஐதராபாத்தில் நடைபெற்றது. அதன் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Akhil Akkineni - Zainab Ravdjee Wedding : இளம் நடிகர் அகில் அக்கினேனி, பிரபல தொழிலதிபர் ஜுல்ஃபி ரவ்ட்ஜியின் மகள் ஜைனப் ரவ்ட்ஜியை மணந்துகொண்டார். வெள்ளிக்கிழமை (ஜூன் 6) காலை இருவரும் திருமண பந்தத்தில் இணைந்தனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 அன்று இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. ஜூப்ளி ஹில்ஸில் உள்ள நாகார்ஜுனாவின் புதிய வீட்டில் திருமணம் நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் சில பிரபலங்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

அகில் அக்கினேனி திருமணம்

சிரஞ்சீவி, சுரேஷ், ராம் சரண், உபாசனா, வெங்கடேஷ், ராணா, சுரேஷ் பாபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருமண வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகின்றன. அகில், ஜைனப் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. நாகார்ஜுனா தனது மகன் அகிலின் திருமணத்தை தனிப்பட்ட முறையில் நடத்தினார். இதில் எந்த ஊடகங்களுக்கும் அனுமதி இல்லை. திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அக்கினேனி குடும்பம் இன்னும் வெளியிடவில்லை.

முன்னதாக, திருமணத்திற்கு முந்தைய கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. நாக சைதன்யா, சோபிதா துலிபாலா, சுஷாந்த், சுமந்த், அக்கினேனி வெங்கட், நாகசுசீலா, சுப்ரியா மற்றும் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தம்பி திருமணத்தில் நாக சைதன்யா உற்சாகமாக நடனமாடினார். அவருடன் சுஷாந்த், ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா ஆகியோரும் நடனமாடினர். இந்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகின்றன.

அகில் - ஜைனப் ரிஷப்சன் எப்போது?

ஜூன் 8 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மாலை நாகார்ஜுனா பிரம்மாண்ட வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளார். தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, துணை முதல்வர் பட்டி விக்ரமார்கா, அரசியல் பிரமுகர்கள், திரைப்பட நட்சத்திரங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் தமிழ் திரையுலகை சேர்ந்த பிரபலங்களும் இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வாய்ப்பு உள்ளது. நடிகர் அகில் தற்போது 'லெனின்' படத்தில் நடித்து வருகிறார். நாகார்ஜுனா தமிழில் ரஜினிகாந்த் உடன் கூலி மற்றும் தனுஷ் உடன் குபேரா ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

துரந்தர் விமர்சனம் : ரன்வீர் சிங்கின் ஆக்‌ஷன் விருந்து டேஸ்டா? இல்லை வேஸ்டா?
மதகஜராஜா முதல் டூரிஸ்ட் ஃபேமிலி வரை... 2025-ல் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த டாப் 5 தமிழ் மூவீஸ்