
தமிழ் சினிமாவில் 80 களில் பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் கலக்கியவர் வாகை சந்திரசேகர். இவரது நடிப்பை ரசிக்க ஒரு ரசிகர் கூட்டம் இருந்தது.
இவர் சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது பொருளாலராக இருந்தவர்.
இவர் விஷால் நடிகர் சங்கத்தில் பொறுப்பேற்பதற்கு முன்பே பதவியிலிருந்து விலகிவிட்டார். இதுக்குறித்து தற்போது மனம் திறந்துள்ளார்.
இதில் இவர் பேசுகையில் ‘நான் திமுகவை சார்ந்தவன், சரத்குமார் அதிகமுகவை சார்ந்தவர், நடிகர் சங்கத்தில் கட்சி வரக்கூடாது என்று கூறி தான் நான் பதவிக்கு வந்தேன் என்றும்.
சரத்குமார், ஜெயலலிதாவை புகழ்வதில் எனக்கு எந்த கோபமும் இல்லை, ஆனால், தளபதி ஸ்டாலின் குறித்து அவர் விமர்சித்தது எனக்கு கோபம் வந்தது, அதனால் தான் நடிகர் சங்கத்திலிருந்து விலகினேன்’ என்று மனம் திறந்து கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.