அல்வா வாசு குடும்பத்திற்கு நடிகர் சங்கம் உதவி

 
Published : Aug 17, 2017, 03:18 PM ISTUpdated : Sep 19, 2018, 01:02 AM IST
அல்வா வாசு குடும்பத்திற்கு நடிகர் சங்கம் உதவி

சுருக்கம்

nadigar sangam help in actor halwa vasu family

ரஜினிகாந்த், சத்யராஜ், போன்ற முன்னணி நடிகர்கள் படங்களில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர வேடங்களிலும் நடித்தவர் நடிகர் அல்வா வாசு. சமீப காலமாக கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு உடல், அவருடைய சொந்த ஊரான மதுரையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்க பட்டிருந்தார்.

கடந்த சில மாதங்களாக தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு, இனி மருத்துவம் பார்க்க பணம் இல்லாததால் அவருடைய குடும்பத்தினர் அவரை வீட்டிற்கு அழைத்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அவருடைய மனைவி தன்னுடைய கணவர் உயிரை காப்பாற்ற அனைவரும் உதவுமாறும் கேட்டுள்ளதாக, தகவல்களும் பரவியது.

இந்நிலையில் நடிகர் சங்க பொது செயலாளர் விஷால் நடிகர் சங்கத்தில் இருந்து 20000 ரூபாயை திரட்டி  உடனடி செலவுக்காக அனைவரின்  ஒப்புதல் வாங்கி அவருடைய குடும்பத்துக்கு அளித்துள்ளார்.

மேலும்  அவருடைய மனைவியின் வங்கி கணக்குக்கு அனைவரும் பணம் அனுப்புவதற்கு ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது என்றும் .நடிகர் சங்க பொதுச்செயலாளரும் , பொருளாளரும் தனிப்பட்ட முறையில்  நிதி உதவி வழங்க உள்ளதாகவும். அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்... ஆதி குணசேகரனால் ஆபத்தில் சிக்கும் ஜனனி - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி
டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?