
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசரின் அணியான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.
வெற்றி பெற்ற பின் இந்த அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும், பல்வேறு மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதைத்தொடர்ந்து தற்போது பாண்டவர் அணி சார்பில் நாசர் அணியினர் போட்டியிட உள்ளனர்.
ஆனால் கடந்த முறை நாசர் அணிக்கு, ஆதரவு கொடுத்த பலர் இவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். மேலும் ராதாரவி, சரத்குமார் நடிகர் சங்கத்தில் புகார்கள் இருப்பதால் இம்முறை நடிகை ராதிகாவை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.
இது குறித்து நடிகை ராதிகா முதல் முறையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... நடிகர் சங்க தேர்தல் சம்பந்தமாக யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும், நடிப்பில் மட்டுமே தான் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தல் குறித்து எழும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.