"மைடியர் பூதம்" சீரியல் குட்டி பையனை நாயகனாக மாற்றிய "தோனி கபடி குழு" !          

 
Published : Jul 05, 2018, 07:29 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
"மைடியர் பூதம்" சீரியல் குட்டி பையனை நாயகனாக மாற்றிய "தோனி கபடி குழு" !          

சுருக்கம்

my dear bootham serial actor acting dhoni kabadi kuzhu movie

இந்த படத்தில் "மைடியர் பூதம்" தொடரில் குட்டி பையனாக  நடித்த "அபிலாஷ்" கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஏற்கனவே "நாகேஷ் திரையரங்கம்" படத்தில் வில்லனாக நடித்துள்ளார்.

 

"தோனி கபடி குழு" என்ற தலைப்பே கதையை உணர்த்துகிறது. நல்ல கதை தான் எப்போதும் கதாநாயகன். அதன்படி இப்படத்தின் கதை கபடி மற்றும் கிரிக்கெட் என்று இரண்டு கதாநாயகர்களின் இடையே நடைபெறுகிறது.

இந்த படம் பற்றி இயக்குனர் கூறுகையில்... இக்கதை முழுவதும் கற்பனையானது. அதில் என்னுடைய வாழ்க்கையையும் நான் சேர்த்துள்ளேன். நான் சிறு வயதிலிருந்து கபடி விளையாடி தான் வளர்ந்தேன். நான் பள்ளியில் கபடி சாம்பியன். அப்போது என்னுடைய நண்பர்கள் கிரிகெட் விளையாடும் போது எனக்கு பிடிக்காது. அதன் பிறகு கிரிக்கெட் என்னை மிகவும் ஈர்த்தது. தோனி கபடி குழுவில் சமூக கருத்தும் உள்ளது என்றார் இயக்குனர். 

நடிகர்களை தாண்டி படத்தில் நிஜ வாழ்க்கை கபடி விளையாட்டு வீரர்கள் சிலர் நடிக்கிறார்கள். "பட்டம் போலே" படத்தில் துல்கருடன் நடித்த லீமா இப்படத்தில் நடிக்கிறார்.      

இப்படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம்,கல்லகுறுச்சி ஆகிய பகுதிகளில் 40 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளதாகவும். படம் வருகிற ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் 2018 அன்று வெளியாகும் என இயக்குனர் தெரிவித்துள்ளார். நந்தகுமார் இப்படத்தை தயாரிக்கிறார். வருகிற  7ம் தேதி இந்தியன் கிரிக்கெட் கேப்டன் தோனியின் பிறந்த நாளன்று இதன் டைட்டில் லோகோ வெளியீடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நிவேதா பெத்துராஜ் - ரஜித் திருமணம் நிறுத்தம்? இன்ஸ்டாவில் போட்டோஸை நீக்கியதால் டவுட்டோ டவுட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் ஹைலைட்ஸ்: ராஜீ முதல் தங்கமயில் வரை இன்றைய அப்டேட்ஸ்!