இசைஞானி இளையராஜாவிற்கு கேரள அரசின் 'ஹரிவராசனம்' விருது!

By manimegalai aFirst Published Dec 27, 2019, 4:15 PM IST
Highlights

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்,  ஒவ்வொரு வருடமும் கேரள அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'ஹரிவராசனம்' விருது,  இந்த வருடம் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.
 

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல்,  ஒவ்வொரு வருடமும் கேரள அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'ஹரிவராசனம்' விருது,  இந்த வருடம் இசைஞானி இளையராஜாவுக்கு வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்த தகவலை, தைக்காடு அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து கேரள தேவசம் போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார்.  இந்த விருது விழா வரும் ஜனவரி மாதம் 15ஆம் தேதி காலை 9 மணிக்கும் நடைபெற உள்ளது.

 இந்த விருதை ஏற்கனவே எஸ்.பி.பாலசுப்பிரமணியன், கங்கை அமரன், சித்ரா, யேசுதாஸ் உள்ளிட்ட பலர் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஹரிவராசனம் விருது பிரபல பாடகி பி.சுசிலாவிற்கு வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு இசைஞானி இளையராஜாவிற்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ஒரு லட்ச ரூபாய் ரொக்க தொகையும், பாராட்டுச் சான்றிதழும் கொடுத்து கௌரவிக்கப்படும்.

மேலும் கூடுதல் சிறப்பு என்னவென்றால், இவ்விருதை பெரும் பிரபலம் சபரிமலையில் இசை கச்சேரி நடத்துவதற்கும் அனுமதிக்கப்படுவர்.

click me!