25 வது படத்தில் அடையாளம் காணப்பட்ட தரன்... 

 
Published : Aug 02, 2017, 06:49 PM ISTUpdated : Sep 19, 2018, 12:58 AM IST
25 வது படத்தில் அடையாளம் காணப்பட்ட தரன்... 

சுருக்கம்

music director tharan

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளராக ஆக வேண்டும் என்று ஆண்டு தோறும் பல இளம் இசையமைப்பாளர்கள் முயற்சி செய்து வருகின்றனர்.

ஏற்கனவே பிரபல இசையமைப்பாளர்களாக இருக்கும் பலரின் மத்தியில், குறுகிய காலத்தில் 25  படத்திற்கும் மேல் இசையமைத்து தன்னையும் இசையமைப்பாளர் என்று நிலைநிறுத்திக்கொண்டவர் தரன்

தற்போது  "பிஸ்தா" படத்தின் பாடல்கள் மூலம் அனைவரையும் கவனிக்க வைத்துள்ளார் .   பலவேறு ஹிட் பாடல்களை வழங்கிய தரன் பிரபல மாடல் தீக்ஷிதாவுடன் விரைவில் திருமண பந்தம் மூலம் இணையவிருக்கிறார்.

அறிமுக இயக்குனர் ரமேஷ் பாரதி இயக்கத்தில், "மெட்ரோ" சிரிஷ் கதாநாயகனாக நடிக்க, அவருடன் ஜோடியாக மிருதுளா முரளி நடிக்க இருக்கிறார். இவர் பிரபல மலையாள நடிகர் பாஹாத்  பாசில் உடன் நடித்த படம் பெரும் வெற்றி படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர்களுடன் அருந்ததி நாயர், சதீஷ்,நமோ நாராயணா, யோகி பாபு, சென்டராயன், மற்றும் சுவாமிநாதன், நடிக்கும் இந்த படத்தை One Man Productions சார்பில் எஸ் பி சாம்பசிவம் தயாரித்து உள்ளார்.கிராமிய பின்னணியில் உருவாகும் பிஸ்தா இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் படமாகும். இந்த படத்தில் தரணின் திறமைக்கு சவால் விடும் விதமாக நான்கு பாடல்களும், ஒரு தீம் இசை கோர்ப்பும் இருக்கும் என்கிறது படக்குழு.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?