எனக்கே கூச்சமா இருக்கு...! அடுத்த முறை நடந்தால் எல்லோர் மத்தியிலும் கத்துவேன்...! எச்சரித்த மும்தாஜ்...!

 
Published : Jul 06, 2018, 03:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:37 AM IST
எனக்கே கூச்சமா இருக்கு...! அடுத்த முறை நடந்தால் எல்லோர் மத்தியிலும் கத்துவேன்...! எச்சரித்த மும்தாஜ்...!

சுருக்கம்

mumtaz advice aishwarya but mahath scolding her

பிக்பாஸ் வீட்டில் உள்ள இளசுகள் சற்று அளவிற்கு அதிகமாகவே அத்து மீறி நடந்து கொள்வதாக பார்வையாளர்கள் மட்டும் அல்ல போட்டியாளர்களும் நினைக்கிறார்கள். 

இவர்கள் செய்வதை, சகித்து கொள்ள முடியாமல், மும்தாஜ் நேரடியாகவே ஐஸ்வர்யாவிடம் வந்து நேற்று பேசினார்.

 

அப்போது மும்தாஜ், ஐஸ்வர்யாவை அழைத்து ஷாரிக் உன் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்வது சரியல்ல. எல்லோரும் இருக்கும் போது நீங்கள் இருவரும் இப்படி நடந்துக் கொள்வது அநாகரீகமான செயல். நாம் செய்வதையெல்லாம் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள் என கூறுகிறார்.

இதற்கு ஐஸ்வர்யா ஷாரிக் ரொம்ப நல்ல பையன். அவன் சும்மா தான் படுத்திருந்தான் என கூறுகிறார்.

பின் மும்தாஜ் என்ன நடந்தது என்பது தனக்கு தெரியும், இதை பார்த்தல் தனக்கே கூச்சமாக இருப்பதாக கூறி, இனி இப்படி நடந்துக் கொள்ளாதீர்கள் என கூறி மற்றொரு முறை நடந்தால் அனைவர் மத்தியிலும் கத்தி பேசுவேன் என கூறுகிறார். இவர் வார்த்தையை மதிப்பதாக கூறி இனி இப்படி நடக்காது என சத்தியம் செய்கிறார் ஐஸ்வர்யா. 

இதை தொடர்ந்து, ஷாரிகிடம் சென்று, நீ பக்கத்துல படுத்ததை வைத்து மும்தாஜ் திட்டுவதாக ஐஸ்வர்யா கூற, ஷாரிக் ஏன் என்ன நடந்துச்சி அதை அவங்க பாத்தாங்க என கோபமாக கேட்க, ஷாரிக்கை உசுப்பேற்றுவது போல் நீ பயந்துடாத என கூறி மும்தாஜை விமர்சித்து பேசுகிறார் மஹத்.

சிறியவர்களுக்கு பிக்பாஸ் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் நல்லதை கூறினாலும், தவறாகத்தான் எடுத்து கொள்ளப்படுகிறது என்பது இதில் இருந்து தெரிந்திருக்கும். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!