
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகியுள்ள 'தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி' திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி இந்தியா முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் உள்ள பிவிஆர் திரையரங்கில் அக்டோபர் 6ஆம் தேதி மதியம் 2.30 மணி காட்சி முழுக்க முழுக்க பெண்களுக்காக மட்டுமே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த காட்சிக்கு மிக வேகமாக ரிசர்வேஷன் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த காட்சிக்கு வருகை தரும் பெண் ரசிகைகள் அனைவருக்கும் திரையரங்கில் ஸ்நாக்ஸ் மற்றும் காபி இலவசமாக வழங்கப்படும் என்றும் அந்த திரையரங்கின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் காரைக்குடியில் உள்ள திரையரங்கில் விஜய்யின் 'தெறி' படம் பெண்களுக்காக ஒரு காட்சி திரையிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்து இதே போல் டெல்லியில் பெண்களுக்காக வெளியிடபடுவது குறிப்பிடதக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.