
என்னை கட்டிப்பிடிக்க யாருமே இல்லை, நீ ஓரினச் சேர்க்கையாளனா, எனக்கு லவ் புரபோஸ் செய், இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன் என ரேட்டிங்கை எகிறவைக்க அருவெறுப்பின் உச்சத்திற்கு சென்றுள்ளது பிரபல தமிழ் தொலைக்காட்சி.
வட இந்திய தொலைக்காட்சியில் மெகா ஹிட் அடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியை, தமிழின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் என்ற நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. சுமார் 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பிரபலங்கள் 15 பேர் கலந்து கொண்டனர்.
அந்த பிரபலங்களில் ஒருவராக தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது பெரிதும் பேசப்பட்ட ஜுலி என்ற பெண்ணும் கலந்து கொண்டார். தற்போது அவரின் பேச்சு தான் சமூகவலைத்தளங்கள் முழுவதிலும் பேசப்பட்டு வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் சர்ச்சைக்குரிய பெரும் பரபரப்பு நிகழ்வு அரங்கேறியுள்ளது. மெரினா பொண்ணு ஜூலி முதல் எபிசோடில் வந்தபோது ஒவ்வொரு பங்கேற்பாளர்களும் கட்டிப்பிடித்து வரவேற்றுக்கொண்டதை அவர் நினைவுபடுத்தி பேசினார்."ஒவ்வொருத்தரும், கட்டிப்புடிக்குறாங்க, எனக்கு யாருமே இல்லை என் நிலைமய கொஞ்சம் யோசிச்சுப்பாரு..." என்று பகீர் ரக பேச்சு பேசினார் ஜூலி. இந்த வீடியோ வைரலானது.
இதனையடுத்து அன்று இரவே நாள் யார் யார் எங்கு தூங்குவது என ஏசிக்கொண்டிருந்த பொது அப்போது அங்கு இருந்த டபுள் பெட்டில் தூங்குவது யார் என ஆர்த்தி மற்றும் ஜூலியானாவிற்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. எனக்கு டபுள் பெட் வேண்டுமென ஜூலியானாவும், என் சைஸ்கு சிங்கிள் பெட்டில் படுக்க முடியாது, எனக்கு டபுள் பெட் வேணும் என ஆர்த்தி மல்லுக்கு நிற்க சிறிது நேரம் சண்டை முற்றியது...
இந்நிலையில் இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியின் போது பிரபல நடிகையும், பா.ஜ.கவின் உறுப்பினருமான காயத்ரி ரகுராம் மொட்டையாக ஏன் அங்க கத்தின என்று கேட்டார். பிறகு ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது ஏன், அரசுக்கு எதிராக கோஷமிட்டாய், நீ பெரிய அரசியல்வாதியா? ஜூலியை கேட்டது இவர் பாஜகவில் இருப்பதும் அவரின் தலைமையை எதிர்த்து கோஷம் போட்டதால் இப்பட கேள்வி மேல் கேள்வி கேட்டு முகம் சுழிக்க வைத்துள்ளார்.
குறுக்கிட்ட ஆர்த்தி, அரசை எதிர்த்து கோஷம் போடக்கூடாது என்றும், இயல்பான கோரிக்கைதான் வைக்க வேண்டும் என்று கூறினார். இந்த விவாதம் அப்படியே சில நிமிடங்கள் வரை சென்றது குறிப்பிடத்தக்கது. இது போன்ற தேவை இல்லாத மற்றவர் மனம் கஷ்டப்படும்படியான கேள்விகளை கேட்டதும், நீ ஒண்ணும் பெரிய ஆள் இல்ல என்பது போன்று நடந்து கொள்ளவதும் நல்லாவா இருக்கு? என பைக் பாஸ் நிகழ்ச்சி வேறு தளத்திற்கு போனது.
இது கூட பரவாயில்ல அடுத்து நடந்ததை பார்த்திருந்தால் ரொம்பவும் கொடுமையிலும் கொடுமையை, ஓவியா நடிகர் ஆராவிடம் நீ யாரையாவது காதலித்து இருக்கிறாயா என கேட்கிறார். அதற்கு பதில் அளித்த நடிகர் ஆரர் இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை என சொல்ல. அதற்கு நடிகை ஓவியா அப்ப நீ என்ன அவனா ( ஓரினச் சேர்க்கையாளனா) நீ என கேட்ட கேள்வி பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது...
பின்னர் சரி நீ சும்மா தானே இருக்க எனக்கு லவ் புரொபோஸ் செய், வா காதலிக்கலாம் என அவரை விடாமல் துருவி எடுத்தது அருவெறுப்பின் உச்சம் என சொல்லலாம்...
இதனை அடுத்து இந்து நடக்கவிருக்கும் புரோமோவில் வையாபுரி கதறி கதறி அழுவதை பார்க்க முடிகிறது. அவரை அருகில் இருந்து ஜூலி தேத்தினார். பிறகு அவர் அழுவதற்கு காரணம் என்ன என்பது தெரியவில்லை. ஆனால் அதே வீடியோவில் நடிகையும், நடன இயக்குநருமான காயத்ரி ரகுராம், இதுக்குத்தான் இந்த மாதிரி எச்சைங்களோட நான் வர மாட்டேன்னு சொன்னேன். நான் ஃபர்ஸ்ட்டே சொன்னேன். எனக்கு யார் அவங்க என கூறுகிறார். காயத்ரி ரகுராம் இப்படி பேசியது தான் நடிகர் வையாபுரி கதறி அழுவதற்கு காரணமா? வைரலாகிறது அந்த வீடியோ. அதே நேரம் ரேட்டிங்க்காக விஜய் தொலைக்காட்சியே இப்படி செய்ய வைக்கிறதா? என்ற கேள்விகளும் எழுகிறது...
தொலைக்காட்சி ரேட்டிங்க்காக இப்படியெல்லாமா கேவலப்படுத்திப்பாங்க?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.