
யூடுப் உள்ளிட்ட இணையதளங்களில் திரைப்படங்களை விமர்சனம் செய்பவர்கள் பணம் வாங்கிக்கொண்டு அதற்கேற்றவாறுதான் விமர்சனம் செய்கிறார்கள் என்ற பொதுவான குற்றச்சாட்டுகள் நிலவி வரும் நிலையில் பிரபல மலையாள தயாரிப்பாளர் வினோத் புகழ்பெற்ற ‘புக் மை ஷோ’நிறுவனத்தினரும் அதே வகையான மோசடிகளில் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.
நிவின் பாலி நடிப்பில் வெளியான மூத்தோன் படம் விமர்சகர்கள் ஏகோபித்த பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில், அப்படத்தின் தயாரிப்பாளர் வினோத் குமார் தனது டிவிட்டர் பக்கத்தில், புக் மை ஷோ பெரிய மோசடி செய்து வருகிறது. தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு டிக்கெட்டின் விலையிலிருந்து ரூ. 30 பெற்றாலும் கூடுதலாக பணத்தை கொள்ளையடித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் படத்தின் புரொமோஷனுக்காக லட்சக்கணக்கில் பணத்தை செலுத்தவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
சமீபத்தில் புக் மை ஷோ எனது படத்தின் ரேட்டிங்கை 19% சதவீதம் குறைத்து மதிப்பிட்டு விட்டனர். அதன்பிறகு நான் லட்சக்கணக்கில் பணம் கொடுக்க சம்மதம் சொன்ன பிறகு சில மணிநேரங்களில் என் படத்தின் மதிப்பீடு 76% ஆக அதிகரித்தது. புக் மை ஷோவில் கொடுக்கப்படும் ரேட்டிங் உண்மையில்லை. தயாரிப்பாளர்கள் இதை புறக்கணிக்க வேண்டும். தயாரிப்பாளர் தனஞ்செயன் மாதிரி தொழில் மூத்தவர்கள் இதில் தலையிட்டு முடிவு எடுக்க வேண்டும்என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.