
நடிகர் மோகன் லால் (Mohan Lal) நடிப்பில், ப்ரியதர்ஷன் இயக்கத்தில் (Priya Dharshan) மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'மரைக்காயர்' (Marakkar Movie) திரைப்படத்தில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பை வெளியிட்டு அதிர வைத்துள்ளது படக்குழு.
இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மலையாளத் திரைப்படமான 'மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்', திரைப்படம் டிசம்பர் 2 ஆம் தேதி உலக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியது. பல விருதுகளை இப்படம் வெளியாவதற்கு முன்பே பெற்றிருந்தாலும், சமூக வலைத்தளங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இப்படத்தில் மோகன்லாலை தவிர, மலையாள திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வாரியர், தேசிய விருது பெற்ற கீர்த்தி சுரேஷ், பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி, அர்ஜுன் சர்ஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இயக்குனர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே சுமார் 100 கோடி ரூபாய்க்கு ப்ரீ புக்கிங் செய்யப்பட்டு வசூல் செய்தது. இந்நிலையில் தற்போது 'மரைக்காயர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளது.
பொதுவாக ஒரு படம் ரிலீஸ் ஆகி குறைந்த பட்சம் ஒரு மாதத்திற்கு பின்பு தான் ஓடிடி-யில் படங்களை ரிலீஸ் செய்வது வழக்கம். ஆனால் இப்படம் 15 நாட்களில் ஓடிடியில் ரிலீஸ் ஆகவுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள தகவலில் டிசம்பர் 17 ஆம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாம். இதற்க்கு முக்கிய காரணம், 'மரைக்காயர்' படம் வெளியான இரண்டாவது நாளே தமிழ் ராக்கர்ஸ் போன்ற தளத்தில் வெளியானதாக கூட இருக்கலாம் என யூகிக்க படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.