
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். இதையடுத்து ஜிகர்தண்டா, இறைவி, பேட்ட, ஜகமே தந்திரம் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி உள்ள படம் ‘மகான்’.
விக்ரம் ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில், அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வாணி போஜன், சிம்ரன், பாபி சிம்ஹா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
மகான் படத்தை 7 ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பாக லலித் குமார் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் பின்னணி பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இப்படத்தை நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கடந்த சில மாதங்களாகவே தகவல் வெளியான வண்ணம் இருந்தன.
இதையறிந்து ஷாக் ஆன ரசிகர்கள், தயவு செய்து படத்தை திரையரங்கில் வெளியிடுமாறு சமூக வலைதளம் வாயிலாக தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால், படக்குழு தங்கள் முடிவை மாற்றவில்லை. தற்போது மகான் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 10-ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
விக்ரம் நடித்த படம் நேரடியாக ஓடிடி-யில் ரிலீசாவது இதுவே முதன்முறை. அதேபோல் இப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜுக்கு இது இரண்டாவது ஓடிடி ரிலீஸ். இதற்கு முன்னர் தனுஷை வைத்து இவர் இயக்கிய ஜகமே தந்திரம் திரைப்படமும் நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து விக்ரம்- துருவ் விக்ரம் நடித்துள்ள மஹான் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது..இதில் வாத்தியாராக இருக்கும் விக்ரம் தனது தந்தை வழியில் மது ஒழிப்புக்காக போராட செல்கிறார்..பின்னர் அவர் மிகப்பெரிய சாராய வியாபாரியாக மாறும் காட்சிகளும், மகன் தந்தை விக்ரமை கண்டு அதிரும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளது... இந்த ட்ரைலரை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..
ட்ரைலர் வெளியாகி மாஸ் காட்டி வரும் வேளையில் தற்போது அடுத்த சிங்கிள் வெளியாகும் தேதி அறிவிக்கப்ட்டுள்ளது. விக்ரம் - துருவ் நடித்துள்ள மஹான் படத்திலிருந்து "Missing Me" சிங்கிள் இன்று மாலை வெளியாகும் என கூறப்பட்டுள்ளது...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.