சிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை!

Published : Oct 22, 2019, 01:41 PM IST
சிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை!

சுருக்கம்

தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் கை கோர்த்துள்ள, 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் கை கோர்த்துள்ள, 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை வரவேற்க இப்போதே தயாராக உள்ளனர் விஜய் ரசிகர்கள். அதே போல் படக்குழுவினரும் 'பிகில்' பட ப்ரமோஷன் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'பிகில்' படத்தின் சிறப்பு காட்சி அனுமதி இன்றி, ஏதேனும் திரையரங்கங்களில் ஒளிபரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அதே போல் அனுமதி தரும் முன்னனே, அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பது அரசின் கடமை என்றும், கடம்பூர் ராஜூ தற்போது கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி உரிய முறையில் கேட்டல் விதிமுறைகளை விளக்கி அனுமதி தரப்படும் என அமைச்சர் கூறியுள்ளது விஜய் ரசிகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!