
பட வாய்ப்புகள் அதிக அளவில் இல்லாததால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடிவு செய்தவர் நடிகை ஓவியா. ஆரம்பத்தில் இவருக்கு மக்கள் மத்தியில் அதிக அளவில் வரவேற்பு இல்லை என்றாலும், இவருடைய குணம், நேர்மையை பார்த்து குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள் என ரசிகர் கூட்டமே உருவானது.
நாளடைவில் இவருக்காக இணையதளங்களில், ஓவியா ஆர்மி, ஓவியா ரசிகர்கள், என மிகவும் பிரபலமானார் ஓவியா. ரசிகர்களை தொடர்ந்து சினிமாத்துறையை சார்த்த, நடிகை ஸ்ரீ பிரியா, காமெடி நடிகர் சதீஷ், நடன இயக்குனர் சதீஷ், நடிகர் சிம்பு, சித்தார்த், பாடகி சின்மயி என பலரும் ஓவியாவிற்கு ஆதரவாக தன்னுடைய கருத்துக்கதை ட்விட்டரில் பகிர்ந்து வந்தனர்.
கடந்த வாரம், அனைத்து போட்டியாளர்களாலும் கார்னர் செய்யப்படும் ஆரவின் காதல் தோல்வியால் ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ஆளாகி எதிர்பார்க்காத நேரத்தில் இந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார்.
மீண்டும் ஓவியா உடல் நலமானதும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வரும் நிலையில், தற்போது ஓவியா அவருடைய சொந்த ஊரான கொச்சினில் ரெஸ்டாரண்டில் எடுத்துக்கொண்ட செல்பி வெளியாகியுள்ளது, இதில் அவர் ஆண்களை போல ஹேர் கட் செய்துள்ளார், இதை பார்த்து தற்போது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.