
திருப்பூர் மாவட்டத்தில், டாஸ்க் மார்க் கடையை மூடும் படி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தை கலைக்க காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் பாண்டியராஜன் என்கிற அதிகாரி பெண்கள் மற்றும் ஆண்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினார்.
இதுகுறித்து தன்னுடைய கருத்தை பதிவு செய்த நடிகர் மயில் சாமி, தன்னுடையா கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில், காவல்துறை உங்களது நண்பன் என கூறுகின்றனர், ஆனால் பொது மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவர்களே இது போன்ற அராஜகத்தில் ஈடுபாடு வன்மையாக கண்டிக்க தக்கது என்கிறார்.
மேலும் ஒரு பெண் மீது இவர் தாக்குதல் நடத்துவதற்கு இவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்...? என கேள்வி எழுப்பினார். தற்போது நடைபெற்ற இந்த அடக்குமுறையை பார்க்கும்போதே நெஞ்சம் பதைக்கிறது என்றும் இந்த அதிகாரியை உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இவரை போலவே பலர் இந்த தாக்குதலுக்கு தங்களுடைய, எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.