
சின்னத்திரை நயன்தாரா என சொல்லும் அளவிற்கு, சின்னத்திரை ரசிகர்களை தன்னுடைய அழகாலும், நடிப்பாலும் அதிகம் கவர்ந்தவர் நடிகை வாணி போஜன். தற்போது இவருடைய காட்டில் தான் பட மழை பொழிந்து கொண்டிருக்கிறது.
வாணி போஜன், நடிகர் அசோக் செல்வன் மற்றும் ரித்திகா சிங் நடித்த, 'ஓ மை கடவுளே' படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால், ஹீரோயின் ரித்திகா சிங்கை தூக்கி சாப்பிடும் அளவிற்கு ரசிகர்களை ஈர்த்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கை பற்ற துவங்கிவிட்டார்.
'ஓ மை கடவுளே' படத்தை தொடர்ந்து, வைபவுக்கு ஜோடியாக வாணி நடித்து ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று ஓடிடி தளத்தில் வெளியான, லாக்அப் படத்திற்கு, கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளது.
இந்த நிலையில் வாணி போஜன் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. ஆதவ் கண்ணதாசன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் நாயகியாக நடிக்க வாணிபோஜன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார்.
இந்த படத்தின் டைட்டில் இன்று இரவு 7 மணிக்கு வெளியாக உள்ளது. இந்த படத்தின் டைட்டிலை பிரபல பாடகியும், ’மாஸ்டர்’ பட நடிகையுமான ஆண்ட்ரியா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட உள்ளார் இதுகுறித்த அதிகார பூர்வ தகவலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பரணிதரன் என்பவர் இயக்கும் இந்த படத்தில் சுப்பு பஞ்சு, சுரேஷ் மேனன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.