"இதுபோதும்... வேற என்ன வேணும்...!” - பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவினுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்.. மேடையிலேயே கண்கலங்கிய லாஸ்லியா!

Published : Nov 04, 2019, 07:29 PM IST
"இதுபோதும்... வேற என்ன வேணும்...!” - பிக்பாஸ் கொண்டாட்டத்தில் கவினுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸ்.. மேடையிலேயே கண்கலங்கிய லாஸ்லியா!

சுருக்கம்

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த 'பிக்பாஸ் சீசன்-3' கொண்டாட்டம் நிகழ்ச்சி, ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இதில், 'பிக்பாஸ்-3' இல் கலந்து கொண்ட போட்டியாளர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை "நீயா நானா" புகழ் கோபிநாத் தொகுத்து வழங்கினார். 

அரங்கில் இருந்த பார்வையார்கள் மட்டுமின்றி, நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் கண்டுகளித்த அனைவரின் கவனமும் மக்களின் மனங்களை வென்ற போட்டியாளர்கள் கவின் மற்றும் லாஸ்லியாவின் பக்கமே இருந்தது எனலாம்.  காரணம், பிக்பாஸ் வீட்டில் கவின் - லாஸ்லியா ஜோடி உண்மையாகவும், நேர்மையாகவும், ஆத்மார்த்தமாகவும் வாழ்ந்ததுதான். பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின்னர், அவர்களது காதல் என்னவானது? அவர்கள் தொடர்ந்து ரிலேஷன் ஷிப்பில்தான் இருக்கிறார்களா? 

அவர்களின் அடுத்தக்கட்ட நகர்வு என்ன? என அக்கறையுடன் கூடிய பல கேள்விகளுடனும், கவலையுடனும் கவிலியா ஆர்மிக்கள் காத்துக் கொண்டிருந்தன. இப்படி, கவிலியாவை பார்க்க ஆவலுடன் காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, செம தீனி போடுவதுபோல் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சி அமைந்திருந்தது. 


ஆம், நிகழ்ச்சி தொடங்கியதும் போட்டியாளர்களுக்கு அரங்கில் இருந்த ரசிகர்கள் பலரும் ஆரவாரம் செய்தனர். குறிப்பாக, நடிகர் கவின் பேச ஆரம்பித்தபோது, ரசிகர்கள் எழுப்பிய கரகோஷமும், ஆரவாரமும் அரங்கையே அதிரடி வைத்தது. கவின் நன்றி சொல்லி, போதும் போதும் என செய்கை காட்டிய பிறகும் ரசிகர்கள் நீண்ட நேரம் கூச்சலிட்டு, அவருக்கு தங்களது அன்பையும் ஆதரவையும் வெளிப்படுத்தினர். 

இதைக் கண்டு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி கோபிநாத்தே, "கவின் தம்பின்னு கூப்பிட்டு பழகுனே எனக்கே, உன்னை பற்றி பேச இப்போ பதற்றமா இருக்குடா!" என அண்ணனுக்கே உரிய அன்பை வெளிபடுத்தினார். 

இப்படி, கவினுக்கு கிடைத்த மாஸ் ரெஸ்பான்ஸை பார்த்து உணர்ச்சிவசப்பட்ட லாஸ்லியாவின் கண்களில் ஆனந்த கண்ணீர் கசிய, அதனை யாருக்கும் தெரியாமல் அவர் துடைத்துக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதுதான் ஆத்மார்த்தமான அன்பின் வெளிப்பாடு.
 பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது கவினுக்கு ஒரு நெகடிவ் இமேஜ் இருப்பதுபோன்றே காட்டப்பட்டது. 

ஆனால், உண்மையில் கவினுக்குதான் மக்களின் ஆதரவு அதிகம் இருக்கிறது என்பது உணர்த்தும் வகையில் ரசிகர்களின் ஆரவாரம் அமைந்திருந்தது. கவினுக்கு எப்படியொரு வரவேற்பு கிடைக்க வேண்டும் என லாஸ்லியா ஆசைப்பட்டிருப்பாரோ, அப்படியொரு வரவேற்பு தனக்கு பிடித்தமானவருக்கு கிடைக்கும்போது கண்கலங்கதானே செய்யும். அதை மறைக்க முடியுமா என்ன?  இதனை நோட் செய்த கவிலியா ரசிகர்கள், அந்தக் காட்சியை ஸ்கிரீன் ஷாட் எடுத்து  சோசியல் மீடியாவில் கொண்டாடி வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் சிங்கநடை போட வரும் ரஜினி... படையப்பா 2 பற்றி ஹிண்ட் கொடுத்த சூப்பர்ஸ்டார்..!
கிரிஷ் மீது பாசமழை பொழியும் மனோஜ்... ரோகிணி ஹேப்பி; விஜயாவுக்கு ஏறும் பிபி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்