நாங்க தான் கெத்து “படம் ரிலீஸ் ஆகட்டும் அப்புறம் பாரு” ஐடி பசங்கயெல்லாம் விவசாயம் பண்ண வந்துடுவாங்க!

First Published Feb 22, 2018, 1:13 PM IST
Highlights
Many more young people come to agriculture after this film is released


கெத்தான விவசாயியாக கார்த்தி நடித்திருக்கும் “கடைக்குட்டி சிங்கம்” படம் ரிலீசான பிறகு இன்னும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் படம் `கடைக்குட்டி சிங்கம்'. முதல் முறையாக சூர்யா தயாரிப்பில் அவரது தம்பி கார்த்தி நடித்திருக்கும் இந்த படத்தில் நாயகியாக சாயிஷா, ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா நடிக்கின்றனர். கார்த்தியின் அப்பாவாக சத்யராஜ், கார்த்தியின் அக்காக்களாக மௌனிகா, யுவராணி, தீபா, ஜீவிதா, இந்துமதி என்று 5 பேர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார், பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ் இயக்குகிறார். பெரிய நட்சத்திர பட்டாளத்தோடு பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்த படத்தின் மூலம் கெத்தான விவசாயியாக மாறியிருக்கும் கார்த்தி மாதம் 1½ லட்சம் ரூபாய் சம்பாதிக்கும் வேடமாம். எப்படி டாக்டர், இன்ஜினீயர் என்று எல்லோரும் பெயருக்கு பின் தாங்கள் செய்யும் வேலையை போட்டு பெருமை பீற்றிக்கொள்கிறார்களோ அதே போல் கார்த்தி, தான் ஒரு விவசாயி என்பதை பைக் நம்பர் ப்ளேட் முதல் பல இடங்களில் பெருமையாக சொல்லிக்கொள்ளும் ஒரு கெத்தான விவசாயி வேடத்தில் தெரிக்கவிட்டுள்ளாராம்.

கடந்த சில வருடங்களாக இளைஞர்கள் தாங்கள் செய்யும் ஐ.டி. வேலை போன்றவற்றை விட்டுவிட்டு விவசாயம் செய்ய வந்துவிட்டார்கள். `கடைக்குட்டி சிங்கம்' வெளியானதும் நிறைய இளைஞர்கள் விவசாயம் செய்ய வருவார்கள். அந்த அளவுக்கு படத்தில் விவசாயத்தின் முக்கியத்துவம் பற்றியும், உறவு பற்றியும் பதிவு செய்திருக்கிறாராம் இயக்குனர்.

இந்த கதையை முதலில் கேட்ட சூர்யா தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான குடும்ப கதையை பார்த்து வெகு நாளாச்சு என இயக்குனரை பாராட்டினாராம். கார்த்தி கடுமையான உழைப்பை போட்டு நடித்துள்ளாராம், உண்மையான விவசாயியாக ஜாலியாக நடித்துள்ளாராம்.

சூர்யாவின் தம்பி என்பதால் “கடைக்குட்டிசிங்கம்” என பெயர் வைத்துள்ளதாக ஒரு தகவல் வெளியானது. படத்தில் நாயகன் கார்த்தி 5 அக்காள்களின் கடைசி தம்பியாம் அதனால் தான் இந்த படத்திற்கு இந்த தலைப்பு வைத்திருக்கிறார்கள்.

click me!