
மலையாளத்தில் லாக்டவுனக்கு முன்னதாக பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோஷியும் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிஜுமேனன், பிரித்விராஜ் நடித்திருந்த இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த நடிகர் அனில் நெடுமங்காடு நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மலையாளத்தில் வெளியான காமாட்டிபாதம், பாவாடா உள்ளிட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் அனில் நெடுமங்காடு. இவர் இன்று தோடுபுழாவில் உள்ள மலங்கர அணையில் நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அங்கு அவர் நீரில் மூழ்கியதாக தெரிகிறது. இதனையடுத்து அவரை மீட்டவர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டதையடுத்து அவரது உடலானது தோடுபுழா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
இவரது மறைவிற்கு மலையாள திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். “அய்யப்பனும் கோஷியும்” பட இயக்குநர் சச்சி உடல் நலக்குறைவால் கடந்த ஜூன் மாதம் 18ம் தேதி காலமானார். அதேபோல் கட்ந்த இரு தினங்களுக்கு முன்பு ‘சூஃபியும் சுஜாதையும்’ பட இளம் இயக்குநர் நரனிப்புழா ஷாநவாஸ் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில் மூளைச்சாவு அடைந்து மரணமடைந்தார். இப்படி அடுத்தடுத்து தொடரும் திறமையான கலைஞர்களின் மரணத்தால் மலையாள திரையுலகம் மீள முடியாத சோகத்தில் மூழ்கியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.