
விஜய் டிவி தொலைக்காட்சியில், உலக நாயகன் கமலஹாசன், தொகுத்து வழங்க உள்ள பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சி, ஜூன் 23 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ள பிரபலங்கள் என பலரது பெயர் அடிப்பட்டு வருகிறது. இதனை சிலர் வதந்தி என நேரடியாகவே கூறினர். அந்த வகையில் விஜய் டிவி, தொலைக்காட்சி மூலம் பிரபலமான ப்ரியங்கா, மற்றும் மைனா நந்தினி ஆகிய சிலரது பெயரும் கிசுகிசுக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து நந்தினியிடம் கேட்ட போது... "பிக் பாஸ்" நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனக்கு, வாய்ப்பு வரவில்லை என்றும், ஒரு வேலை வந்தால் கண்டிப்பாக கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது ஜிம்மிற்கு சென்று, உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள இவர், சீரியல் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு தன்னை தேடி வந்தால், அதில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.