
ரஜினிகாந்த் மனைவி லதாவின் அக்கா மகளும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திராவின் மகளுமான மதுவந்தி மகேந்திராவும் அவரது நாடகக்குழுவைச் சேர்ந்த 4 பேரும் சிகாகோ நகர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டு சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்ட செய்தி பரபரப்பாகியுள்ள நிலையில் நடந்தது என்ன என்பது குறித்து ஆடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார் அவர்.
ரஜினிகாந்த மனைவியின் அக்கா மகளும், நடிகர் ஒ.ஜி. மகேந்திராவின் மகளுமான மதுவந்தி கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. கடந்த 4 ஆம் தேதி மதுவந்தியும், அவர்களுடன் சேர்ந்த 4 பேரும் சென்னையிலிருந்து சிகாகோவிற்குசென்றுள்ளனர். ஒரு நாடக புரோகிற்காக சென்ற அவர்களை, அந்நாட்டு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிகாகோவிற்குள் நுழையக்கூடாது என்றும், நுழையவிடாமல் தடுப்பதற்காக விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார் மதுவந்தி. பி3 விசா என்ற விசாவில் தான் சிகாகோவிற்கு செல்ல வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் மதுவந்தி மற்றும் அவர்களுடன் சென்றவர்களின் விசா பி1 விசாவாகும். இந்த காரணத்திற்காகவே மதுவந்தியும், அவர்களுடன் சென்றவர்களும் கைது செய்துள்ளனர். இதற்கு முன் அமெரிக்கா சென்ற மதுவந்திக்கு இதேபோன்ற பிரச்னை ஏற்பட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் தான் கைது செய்யப்பட்டதாக பரவிய செய்திகள் குறித்து ஆங்கிலம் மற்றும் தமிழில் ஒரு ஆடியோ பதிவு வெளியிட்ட மதுவந்தி,...அதில் அமெரிக்காவில் விசா முறையாக இல்லையென்று அதிகாரிகள் சொன்னதால் தாங்களே சென்னை வந்து சரியான விசாவுக்கு (P3 Category) விண்ணப்பித்ததாக அறிவிக்கிறார். மற்றபடி கைது செய்யப்பட்டதாக வந்ததெல்லாம் வீண் வதந்தி என்றும் சொல்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.