
திரைத்துறையில் நடிக்க வாய்ப்பு கேட்கும் நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகள் கூறி வருவது வழக்கமாக உள்ளது. அதிலும் 'மீ டூ' அமைப்பு மூலம் பலர் தங்களுடைய ஆதங்கங்களை கொட்டித் தீர்த்தனர்.
திரையுலகை தவிர, மற்ற இடங்களிலும், அலுவலகங்களிலும், பாலியல் குற்றங்கள் இருந்தாலும் அதிகப்படியாக திரைத்துறையை சேர்ந்தவர்கள் தான் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே பட வாய்ப்பு கொடுப்பதாகக் கூறி பலர், தன்னை பயன்படுத்திக் கொண்டதாக நடிகை ஸ்ரீ ரெட்டி கூறியிருந்த நிலையில், தற்போது பட வாய்ப்பு கேட்டு அணுகிய போது பலர் தன்னை அட்ஜஸ்ட் செய்து போக சொன்னதாக குற்றம் சாட்டியுள்ளார், 'மா' குறும்படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட மலையாள பட நடிகை கனி.
இவர் மாடல் அழகியாக இருந்து கொண்டே, மலையாள பட வாய்ப்புகளை பெற முயற்சித்த போது, பலர் இவரிடம் நேரடியாகவே அட்ஜஸ்ட் செய்து போக சொன்னதாகவும், ஆனால் அப்படி பட்ட வாய்ப்பே தேவையில்லை என்று அதனை மறுத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனால் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை தான் இழந்திருப்பதாக கூறும் கனி, ஒருமுறை தன்னுடைய தாயுடன் பட வாய்ப்பு கேட்டு சென்ற போது, ஒருவர் நேரடியாகவே தன் தாயின் முன்பே அட்ஜஸ்ட் செய்தால் மட்டுமே உங்கள் மகளுக்கு வாய்ப்பு கிடைக்கும் என கூறியது உச்சகட்ட கொடுமை என ஆதங்கப்பட்டுள்ளார்.
எனினும் தன்னுடைய குடும்பத்தினர் தனக்கு பக்கபலமாக இருந்ததால் அனைத்திலும் இருந்து மீண்டு, மீடூ பிரச்சனைக்குப் பின் இதுபோன்ற எந்த தொந்தரவும் இல்லாத வகையில் படவாய்ப்புகள் கிடைப்பதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.