ரஜினியுடன் இருக்கும் படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்து தரமான சம்பவம் செய்த மு.க. அழகிரி...

Published : Feb 12, 2019, 10:50 AM IST
ரஜினியுடன் இருக்கும் படத்தை புரொஃபைல் பிக்சராக வைத்து தரமான சம்பவம் செய்த மு.க. அழகிரி...

சுருக்கம்

ரஜினி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பிய கையோடு சுடச்சுட தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தை ரஜினியுடன் இருக்கும் படமாக மாற்றினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி. இதைப் பார்த்த ரஜினி, அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர குஷியாகியுள்ளனர்.

ரஜினி வீட்டுத் திருமணத்தில் கலந்துகொண்டு திரும்பிய கையோடு சுடச்சுட தனது ஃபேஸ்புக் ப்ரொஃபைல் படத்தை ரஜினியுடன் இருக்கும் படமாக மாற்றினார் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி. இதைப் பார்த்த ரஜினி, அழகிரி ஆதரவாளர்கள் பயங்கர குஷியாகியுள்ளனர்.

சமீபத்தில் முக அழகிரி பிறந்த நாளுக்கு வாழ்த்து சொன்ன ரஜினி, “நீங்கள் நேர்மையான நல்ல மனிதர். அரசியல் காலண்டரில் கடைசிப்பக்கம் என்பது யாருக்குமே இல்லை; எதிர்காலத்தில் எழுந்து வருவீர்கள்,” என்று வாழ்த்து தெரிவித்திருந்தார். இது அழகிரிக்கும் அவர் ஆதரவாளர்களுக்கும் தனி உற்சாகத்தைத் தந்தது. ரஜினியின் அரசியல் பயணத்தில் அழகிரி இணைவார் என பேச்சுக்கள் எழுந்தன.

இந்த நிலையில் நேற்று சென்னையில் நடந்த ரஜினி மகள் சௌந்தர்யா திருமணத்துக்கு வந்த அழகிரியை, ரஜினி அன்புடன் வரவேற்று பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த காட்சி, புகைப் படங்களாக வெளியாகின. இந்த திருமணத்துக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட எத்தனையோ தலைவர்கள் வந்திருந்தாலும், அழகிரியின் வருகையும், அவரும் ரஜினியும் பேசிக்கொண்டிருந்த படமும்தான் மிக அதிகமாக  வைரலானது.

திருமணத்துக்கு வந்து போன கையோடு, ரஜினியுடன் தான் உள்ள படத்தை ப்ரொபைலில் வைத்துவிட்டார் அழகிரி. இந்த படத்தைப் பார்த்த அழகிரி ஆதரவாளர்களும் ரஜினி ரசிகர்களும், “அன்பு தலைவரும் அஞ்சா நெஞ்சரும் இணைந்து செயல்பட வேண்டும்… அதுதான் தமிழ் நாட்டுக்கே நல்லது...அஞ்சாநெஞ்சனுக்கு கெத்த பாத்தியா தலைவர் கூட இன்னிக்கு எடுத்த படத்த profile ah செட் பண்ணிட்டாரு😂😂😂😂💪🏻...Profile picture -ல தலைவரோட நீங்கள் இருக்கும் போட்டோவை வைத்து எங்களையும் எங்கள் தலைவரையும் பெருமைபடுத்தியதற்கு நன்றி மதுரை வீரன் சார். இதுதான் உண்மையான தரமான சம்பவம்’ என்பது போன்ற கமெண்டுகளை அழகிரியின் பக்கத்தில் குவித்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டிரக் டிரைவராக இருந்த அவதார் டைரக்டர் ஜேம்ஸ் கேமரூன்... பில்லியனர் இயக்குனர் ஆனது எப்படி?
அதே 4 ஸ்டெப்... ரம்யா ஜோ இன்னும் மாறவே இல்ல; மீண்டும் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆட்டம் போட்ட வீடியோ வைரல்